விண்மீன்களுக்கு மத்தியில் நிலா; தீபங்களின் நடுவில் நீ! | |
சன்னிதி வாசல் யாசகர்களாய் திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன விளக்குகள் நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக | |
உன் நினைவெனும் தீபத்தில் விட்டிலாய் விழுந்து விழுந்து முடிகின்றன என் மணித்துளிகள் | |
புத்தாடையணிந்த பூரிப்பில் நீ உலவும் அழகைக் காணவேனும் நாள்தோறும் வாராதா ஏதேனும் பண்டிகை |
4 December 2007
காதல் கார்த்திகை
Subscribe to:
Post Comments (Atom)
15 கருத்துக்கள்:
உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்
Indha kavidhai romba azhagu. Aana last kavidhai konjam pazhasu madhiri irukku :D (repeata)
சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக
அழகிய வரிகள்... :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ. கடைசிக் கவிதை கொஞ்ச காலம் ஜிடாக் நிலைத்தகவலாக இருந்தது..... அதான் ;-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபால் :-)
//சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக//
Nalla kavithai!!!!!
\\விண்மீன்களுக்கு மத்தியில் நிலா;
தீபங்களின் நடுவில் நீ!\\
காதல் தீபங்கள் எல்லாம் நல்லாயிருக்கு ;)
அருமையான வரிகள்...
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நாடோடி இலக்கியரே :)
நன்றி கோபி :)
தவறாம அட்டென்டன்ஸ் போட்டுடுறீங்கப்பா ;-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பு :)
Entha siru porikull eppadioru sudarvidum deepamaaa .... manathirkuu idamana iniya kavithai....
கார்திகை(காதல்)தீப கவிதைகள்,
வரிகள் அனைத்தும் அருமை அண்ணா!!!
//உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்//
இது ரொம்ப பிடிச்சிருக்கு.
///பிரேம்குமார் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ. கடைசிக் கவிதை கொஞ்ச காலம் ஜிடாக் நிலைத்தகவலாக இருந்தது..... அதான் ;-)///
நிலைத்தகவல் எனக்கு புதுத்தகவல். நன்றி.
நிலைத்தகவல் - ஸ்டேடஸ் மெசேஜா - புதிய சொல்லாக்கம் - பயன் படுத்துகிறேன் = நன்றி
கார்த்திகைத் தீபங்களைப் பற்றி இப்படியும் சிந்திக்க முடியுமா - காதலன் கவிதை அருமை
நல்வாழ்த்துகள்
Post a Comment