நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்
17வது குறுந்தகவலின் பாதிப்பு இன்னும்
இருக்கிறது
வானவில்லை எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்
கொலை செய்வதாகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்வதாகவோ கனவில் தொலையலாம்
எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!
- ச.பிரேம்குமார்
என்ன கொடுமை இதென்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேறொன்றுமில்லை. தம்பிகள் கார்த்திக் மற்றும் சரவணக்குமாரின் கவிதைகள் தந்த தாக்கம் தான். அவர்கள் எழுதியவைகள் கவிதைகள். இது ஜஸ்ட் மொக்கை ;-)
15 May 2009
நேசம் முடிவுற்ற ஓரிரவில்
எழுத்து வகை: காண்டு, பதிவர் வட்டம், மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
43 கருத்துக்கள்:
மிக யதார்த்தம்!
-ப்ரியமுடன்
சேரல்
என்னங்கணா இது.. செம கலக்கல்..
:))))))
//நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்//
இதுகூட நல்லாத்தான் இருக்கும்.. :)
நன்றி சேரல் :)
சரவணா, நீ கோவப்படுவியோன்னு நினைச்சேன். ஆனா இதை கலக்கல்னு சொன்ன பாரு....ஆவ்வ்வ் :)
//Saravana Kumar MSK said...
//நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்//
இதுகூட நல்லாத்தான் இருக்கும்.. :)
//
ஆமா கார்த்திக்கின் கவிதையில் ஒருத்தரு மல்லாந்து கிடந்தாரு. அதான் என் கவிதையில் (???!!!) ஒருத்தரு குப்புற கிடக்கிறாரு. மத்தபடி எந்த ட்ரிபிள் மீனுங்கும் இல்லப்பா :)
கவிதை அட்டகாசம் பன்னுது.
ரொம்ப ரசிக்க வைத்தது பிரேம்.
சூப்பர்!!!
//சரவணா, நீ கோவப்படுவியோன்னு நினைச்சேன். //
கோபமா..!! சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
//ஆமா கார்த்திக்கின் கவிதையில் ஒருத்தரு மல்லாந்து கிடந்தாரு. அதான் என் கவிதையில் (???!!!) ஒருத்தரு குப்புற கிடக்கிறாரு. மத்தபடி எந்த ட்ரிபிள் மீனுங்கும் இல்லப்பா :)//
குவாட்ரப்ல் மீனிங் இருக்குதானு யோசிக்கிறேன்.. ;)
உங்க இரண்டு பேர் கவிதையும் மொத்தமாய் ஆக்கிரமத்திருந்த ஒரு பொழுதில் இரண்டே நிமிடத்தில் எழுதியது இது :)
குவாட்ராபிள் மீனிங்கா.... கிழிஞ்சுது போ ;-)
//ஆ.முத்துராமலிங்கம் said...
கவிதை அட்டகாசம் பன்னுது.
ரொம்ப ரசிக்க வைத்தது பிரேம்.
சூப்பர்!!!
//
மிக்க நன்றி முத்து. (இது நெசமாலுமே சீரியஸ் கவிதை மாதிரி வந்துடுச்சோ???)
இதையெல்லாம் மொக்கனு சொன்னாக்க, அப்ப நாங்க எழுதறது என்ன படுமொக்கையா?
//குவாட்ரப்ல் மீனிங் இருக்குதானு யோசிக்கிறேன்.. ;)//
ஆஹா பயபுள்ளைக்கி அடுத்த லைன் எடுத்துக்கொடுத்திட்டீங்க போலிருக்கே!
இன்னுமொரு பின்னிரவு வரப்போகுது!
யார் இரையாகப்போறாங்களோ....??
:))))
ஆதவா, உள்குத்து எல்லாம் இல்லீங்க, எழுதும் போது அப்படி நினைச்சு தான் எழுதினேன்
//நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்//
இனிமே பின்னிரவு டிரைப்பண்ணாத்தீங்க பாஸ்!
மதியமே குப்புறடிச்சுட்டு படுத்துட்டா இன்னும் நிதானமா கனவு கண்டு கம்ப்ளீட்டு பண்ணமுடியும்ன்னு நான் நினைக்கிறேன் :)
//இனிமே பின்னிரவு டிரைப்பண்ணாத்தீங்க பாஸ்!
மதியமே குப்புறடிச்சுட்டு படுத்துட்டா இன்னும் நிதானமா கனவு கண்டு கம்ப்ளீட்டு பண்ணமுடியும்ன்னு நான் நினைக்கிறேன் :)//
ஆயில்ஸ், அத நாம கார்த்திக் கிட்டயும் சரவணன் கிட்டயும் தான் சொல்லனும் :)
//குப்புறக்கிடந்தேன்//
//வானவில்லை எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்//
குப்புரப்படுத்துகிட்டு எப்படிப்பா புகையை இழுப்ப?? எனக்கு தெரிஞ்சு குப்புரபடுத்துக்கிடு யாரும் புகைய இழுத்தது இல்ல ஆனா நீங்க கொஞ்சம் வித்தியாசம் இழுத்தாலும் இழுப்பீங்க
கவிதைய எழுதி எல்லோரும் கலக்கறீங்க, அதக்கூட தப்பாதான் படிக்க தோனுது எனக்கு....
அழகாய் இருக்கிறது.........படம்
அருமையாய் இருக்கிறது....கவிதை.
கார்த்தி இன்னும் இந்தப்பக்கம் வந்து பார்க்கலையோ.. மொக்கைன்னு நினச்சு ஆரம்பிச்சு இருக்கீங்க பிரேம்.. ஆனா கவிதையா வந்து நிக்குது.. கவிதை கவிதை..:-)
//நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்//
ம்ம்ம்
//17வது குறுந்தகவலின் பாதிப்பு இன்னும்
இருக்கிறது//
அச்சச்சோ :O
//வானவில்லை எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்//
இப்ப தெரியுது நீங்க செஞ்ச தப்பு... ராத்திரில வானவில்ல எதிர்ப்பார்த்து கிடந்தது அதுவும் குப்புறகிடந்தது தப்பு அண்ணா... :((
//கொலை செய்வதாகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்வதாகவோ கனவில் தொலையலாம்//
அய்யய்யோ இங்கயும் கொலையா??????? சரவணாஆஆஆஆஆஆஆ எல்லாம் உன்னால... என் அண்ணாவையும் விட்டு வெக்கலயா நீ?? :(((((
//எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!//
நான் தொடரவா??
விடிந்து விட்டது புதிதாய் கடக்க கரையோரக் கனவுகளென இன்னொருநாள்
இனிமையாக!
நாந்தான் 20 :))...சாரி அண்ணா உங்க கவிதைய ரொம்பப்படுத்தியிருந்தா.. :(((
//ஸ்ரீமதி said...
அய்யய்யோ இங்கயும் கொலையா??????? சரவணாஆஆஆஆஆஆஆ எல்லாம் உன்னால... என் அண்ணாவையும் விட்டு வெக்கலயா நீ?? :(((((//
நானா.. நான் ஒண்ணும் பண்ணலையே..
நான் அப்பாவி.. :)
//கவிதைய எழுதி எல்லோரும் கலக்கறீங்க, அதக்கூட தப்பாதான் படிக்க தோனுது எனக்கு....//
தல, உங்கள தனியா கவனிக்கனும்... Why this murder rage?
//மதிபாலா said...
அழகாய் இருக்கிறது.........படம்
அருமையாய் இருக்கிறது....கவிதை
//
மிக்க நன்றி மதி :)
//இப்ப தெரியுது நீங்க செஞ்ச தப்பு... ராத்திரில வானவில்ல எதிர்ப்பார்த்து கிடந்தது அதுவும் குப்புறகிடந்தது தப்பு அண்ணா... :((//
என்னம்மா செய்யுறது? இந்த இலக்கியவாதிங்க கூட சேர்ந்து இப்படி ஆயிட்டேன் ;)
//மொக்கைன்னு நினச்சு ஆரம்பிச்சு இருக்கீங்க பிரேம்.. ஆனா கவிதையா வந்து நிக்குது.. கவிதை கவிதை..:-)//
ஹி ஹி ஹி...நன்றி பாண்டியன். இரண்டு சிங்கத்த சீண்டுனேன். ஒன்னு வருகைப்பதிவு செய்துடுச்சு. குட்டிச்சிங்கத்தத்தான் காணோம்....
//நானா.. நான் ஒண்ணும் பண்ணலையே..
நான் அப்பாவி.. :)//
எனக்கு தெரிலயப்பா... வானவில் வீதியிலும் உன்னைத்தான் சொன்னாங்க.. இங்கேயும் எல்லாரும் உன்னைத்தான் சொல்றாங்க ;-)
\\இது ஜஸ்ட் மொக்கை ;-)
\\
மொக்கையானாலும் உன் மொக்கை தனி மொக்கை மாப்பி ;))
//தல, உங்கள தனியா கவனிக்கனும்... Why this murder rage//
தனியா கவனிக்கனும்ன எப்படி கவிதை புரிஞ்சவங்க இங்க பேசுங்க புரியாதவங்க ஆபிஸ் ரூம்ல வந்து பேசுங்கன்னு சொல்வங்கள அப்படியா ?
murder rage எல்லாம் இல்ல கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம் சரியான கவிதை எல்லாத்தையும் தப்பா புரிந்துகொள்வது என்றால் அதுல நான் பஸ்ட்டு
முதல்ல கவிதை பத்தி சொல்லிடறேன்.. வாவ், பின்றீங்கபா..!
புகைப்பிடித்தல், தற்கொலை இரண்டிற்கும் எதிராக தனிமனிதனாக போராட களம் புகுந்திருக்கும் பிரேம் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
//எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!
சத்தியமா அட்டகாசம்ங்ணா!!! :))
"நேசம் முடிவுற்ற ஓரிரவில்"
சரவணகுமாரின், கார்த்திக்கின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது!!!!
அன்புடன் அருணா
//
இப்ப தெரியுது நீங்க செஞ்ச தப்பு... ராத்திரில வானவில்ல எதிர்ப்பார்த்து கிடந்தது அதுவும் குப்புறகிடந்தது தப்பு அண்ணா... :((
//
:))))
//தனியா கவனிக்கனும்ன எப்படி கவிதை புரிஞ்சவங்க இங்க பேசுங்க புரியாதவங்க ஆபிஸ் ரூம்ல வந்து பேசுங்கன்னு சொல்வங்கள அப்படியா ?//
ஹா ஹா ஹா
//மொக்கையானாலும் உன் மொக்கை தனி மொக்கை மாப்பி ;))//
பல நூற்றாண்டுகளுக்குப்பின் சந்திருக்கிறோம்னு நினைக்கிறேன் :)
கவிதை யதார்த்தம்..
மொத்ததில் "ஹைக்கூ".....வாழ்த்துக்கள்
எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!
//
எதார்த்தம் நிறைந்த வரிகள்!
நான் இப்படி ஏதாச்சு மொக்கை பதிவு போடலாம்னு இருக்கேன். உங்க பதிவ படிச்ச பிறகு,ரொம்ப inspirationalஆ இருக்கு அண்ணா:)
நல்ல யோசனை தான் தமிழ்! சீக்கிரமே நடாத்து :)
எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்
கொலை செய்வதாகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்வதாகவோ கனவில் தொலையலாம்
arumai
யதார்த்தமான வரிகள் பிரேம்
நல்ல கலக்கல் கவிதை.
Post a Comment