2 June 2009

செல்வேந்திரனும் நானும் நண்பர்கள் இல்லை

அருகாமையில் இருக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டாமல் அதென்ன ஆர்குட், வலைதளங்கள் என்று நட்பை தேடுவது என்று கேட்கிறார் செல்வேந்திரன். உண்மை தான். பல சமயங்களில் நமக்கென்று ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்களை மறந்துவிடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு நம்மை தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அது எத்தனை கொடுமையானது என்று யோசித்து பார்க்கையில் விளங்கியது. சுற்றத்தை மறந்து, அதோடு ஒன்றி வாழாமல் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருந்துவிடப் போகிறது

ஆனால் இந்த இணைய நட்புகள் எல்லாமே அபத்தம், வெட்டி வேலை என்பது போன்ற ஒரு தோற்றம் செல்வாவின் கருத்துகளை மேலோட்டமாக பார்க்கையில் தோன்றலாம். இக்கருத்துக்கு எப்போதுமே எனக்கு முரண்படுவதுண்டு. உயிருக்குயிரான நண்பனாகவே இருந்தாலும் ரசனைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ரசனைகளில் நீங்களும் உங்கள் நண்பரும் இரு வேறு துருவங்களாய் இருக்கலாம். இலக்கியத்தேடல் அதிகமாய் உங்களுக்கு தினத்தந்தியின் சிந்துபாத் தான் அதிகபட்ச இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருப்பவர் நண்பனாக அமைந்தால்?

உங்களுக்கு முடியலத்துவத்தை எழுத ஆனந்த விகடனில் இடம் ஒதுக்குகிறார்கள். கவிதை எழுதினால் படிக்க தான் மட்டுமே இருக்கும் சூழலுடையவர்கள் என்ன செய்வார்கள்? தமிழ் என்று ஒரு மொழி இருப்பது கூட அறியாவதர்கள் மத்தியில் உங்கள் மொழியை மறக்காமல் இருக்க என்ன வழியிருக்கிறது? ஒத்தக் கருத்துடைய நண்பர்களை இனங்காண, ரசனைகளை பகிர்ந்துக்கொள்ள இணையம் ஒரு நல்ல இணைப்பாக இருந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை



செல்வேந்திரன் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியின் காணொளி

இந்த இணையமும் வலைப்பூக்களும் அதில் வரும் நட்புகளும் இல்லாமல் போயிருந்தால் பதிவின் தலைப்பை தான் நான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது என் நண்பர் தொலைகாட்சியில் தோன்றுகிறார் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிகிறது

குட்டிச்சாத்தான்(குளத்தான்)க்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

21 க‌ருத்துக்க‌ள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை பிரேம்.. செல்வாவின் கருத்துக்களில் இருந்த சிறு முரண்பாடுகளை தெளிவா சொல்லிட்டீங்க.. கடைசில நம்ம "நண்பருக்கு" வாழ்த்து சொன்னீங்க பாருங்க.. நச்..

Venkatesh said...

//இந்த இணையமும் வலைப்பூக்களும் அதில் வரும் நட்புகளும் இல்லாமல் போயிருந்தால் பதிவின் தலைப்பை தான் நான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது என் நண்பர் தொலைகாட்சியில் தோன்றுகிறார் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிகிறது//

செல்வா நிகழ்ச்சியில் பேசும் போது ஏதோ நானே பேசியதைப்போல் படபடப்பாக இருந்தது எனக்கு, உங்களுடைய விளக்கமும் அருமை பிரேம் !!

வெங்கடேஷ்

Suresh said...

நல்லா இருக்கு உங்க கருத்தும், அவ்ர் கருத்தும் ..

வாழ்த்திய உங்களுக்கு நன்றிகள் தோழா

ஆ.சுதா said...

|ரசனைகளை பகிர்ந்துக்கொள்ள இணையம் ஒரு நல்ல இணைப்பாக இருந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை|

மிக அழகாக சொன்னீர்கள் பிரேம்.

உங்கள் முரண் அதிகப்பட்டு போகவில்லை அதிலிருந்து சற்று விலகி சிரியப் பார்வையை முன் வைக்கின்றீர்கள் அதுவே சிரப்பானது.

கடைசியில் வாழ்த்துக்கள். நன்று.

வினோத் கெளதம் said...

நன்று பிரேம்
நானும் அதே தான் நினிசேன் ஒத்த கருத்து உடைய நண்பர்கள் இணையம் முலம் இணைய வாய்ப்பு உள்ளது..

ராம்.CM said...

அருமையான பதிவு...! நானும் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

கோபிநாத் said...

உன்னோட கருத்தும் சரியாக தான் இருக்கு மாப்பி ;)

Karthik said...

பெரிய பசங்க பேசிக்கிறாங்க.. நான் அட்டென்ட்டன்ஸ் மட்டும் போட்டுக்குறேன்..

ப்ரெசன்ட் ப்ரேம்.

MSK / Saravana said...

செமையா எழுதிருக்கீங்க அண்ணா.. நச்..

//குட்டிச்சாத்தான்(குளத்தான்)க்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்//
ரசித்தேன்.. நானும் வாழ்த்திக்கறேன்.. :)

MSK / Saravana said...

//Blogger Karthik said...
பெரிய பசங்க பேசிக்கிறாங்க.. நான் அட்டென்ட்டன்ஸ் மட்டும் போட்டுக்குறேன்..
ப்ரெசன்ட் ப்ரேம்.//

இதுவும் நல்லாத்தான் இருக்கு.. so ரிப்பீட்டிக்கிறேன்..

ச.பிரேம்குமார் said...

//செல்வாவின் கருத்துக்களில் இருந்த சிறு முரண்பாடுகளை தெளிவா சொல்லிட்டீங்க//

இது முரண்பாடு தானா அப்படீங்கிறதே தெரியல நண்பா. ஏன்னா அவர் ஒரு புள்ளியில் நின்றுவிட்டார். அவர் சொன்ன வரை அவர் சரியாகவே சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் மறுபக்கத்தை நான் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்

ச.பிரேம்குமார் said...

//செல்வா நிகழ்ச்சியில் பேசும் போது ஏதோ நானே பேசியதைப்போல் படபடப்பாக இருந்தது எனக்கு//

அதே தான் அண்ணா எனக்கு நடந்தது. :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ச.பிரேம்குமார் said...

சுரேஷ், வினோத், ராம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ச.பிரேம்குமார் said...

//உங்கள் முரண் அதிகப்பட்டு போகவில்லை அதிலிருந்து சற்று விலகி சிரியப் பார்வையை முன் வைக்கின்றீர்கள் அதுவே சிரப்பானது.//

அதே தான் முத்து. மிக்க நன்றி :-)

ச.பிரேம்குமார் said...

கோப்பி மாப்பி, பாத்து ரொம்ப நாளாச்சு... நலமா? :)

ச.பிரேம்குமார் said...

கார்த்திக், உன் வருகைப்பதிவு கவனிக்கப்பட்டது. கூடவே உன் நக்கலும். என்ன வில்லத்தனம்!!

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி சரவணா... அப்புறம் யூ டூ???!!! ;-))

ஆ.ஞானசேகரன் said...

உங்கள் கருத்தும் சிறப்பாக இருக்கு நண்பா

Unknown said...

//உயிருக்குயிரான நண்பனாகவே இருந்தாலும் ரசனைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.//
ஏற்றுக் கொள்கிறேன்...
(உன்ன யாருடா ஏற்றுக் கொண்டியா இல்லயா எண்டு கேட்டது எண்டு கேட்டா அழுதிடுவன்...)

ஆ! இதழ்கள் said...

உண்மைதான் ப்ரேம்... இணைய நண்பர்களின் அவசியத்தை சரியாக கூறிவிட்டீர்கள்.

(உன்ன யாருடா ஏற்றுக் கொண்டியா இல்லயா எண்டு கேட்டது எண்டு கேட்டா அழுதிடுவன்...)//

கமெண்ட்ல் ஒரு சூப்பர் காமெடி.

நிலாரசிகன் said...

பதிவின் தலைப்பை பார்த்துட்டு சரி ஏதோ வில்லங்கம் இருக்கும்னு இங்க வந்தா "என்னா வில்லத்தனம்" :)

உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். இணையம் இல்லாவிடில் உலக மகா நல்லவன்.வல்லவன். "தல" பிரேம் எனக்கு நண்பனாக கிடைத்திருக்கமாட்டார் :)