10 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : கேள்விகள் ஆயிரம்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
நடுவண் அரசில் வேலை செய்ததால் ஒரு இந்தியப் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பி அப்பா வைத்தது. என் பெற்றோர் ஆசையாக இட்ட பெயரை பிடிக்கவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம் என்றே நினைக்கிறேன்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என் அம்மாச்சி இறந்த போது. விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் எங்களுக்கு பல கதைகள் சொல்லி, வகைவகையாய் சமைத்து போட்டுவர் வாய்க்கு அரிசி போட்ட போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என் கையெழுத்து அழகாக இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர். ஆனால் கல்லூரிக்கு பிறகு எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. இப்போ கொஞ்சம் கிறுக்க ஆரம்பித்துவிட்டேன்

4.பிடித்த மதிய உணவு என்ன?
வீட்டில் சமைத்தது எதுவும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பலரை எனக்கு பாத்தவுடனேயே ரொம்ப பிடிச்சிரும். ஆனா நட்பு பலப்பட சில காலம் பிடிக்கலாம்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
நீச்சல் தெரியாதெனிலும் கடலில் நெஞ்சளவு தண்ணீரில் இறங்கி குளிப்பதுண்டு.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்கள் எப்படி பேசுகிறார்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயத்தை மத்தவங்க தான் சொல்லனும்
பிடிக்காதது கோபமும் சோம்பேறித்தனமும்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவள் அன்பு. பிடிக்காதது அவள் கோபம்

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பொழில்குட்டி

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
சாமி படத்துல “பாஸ்போர்ட சைஸ் படம் தானேன்னு நான் அன்னிக்கு பேண்ட் கூடத்தான் போடலை” அப்படீங்கிறது தான் நினைவுக்கு வருது :)

12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பக்கத்துல ஒரு பயபுள்ள என்னமா கடலை போடுறான். அப்படி என்னதான் பேசுவானுங்களோ? ;)

14.பிடித்த மணம்?
தன் வீட்டை மட்டும் சுத்தமாய் வைத்துக்கொண்டு தெருவில் குப்பையை கொட்டி வைப்பதனால் வரும் வாடையை சுத்தமா பிடிக்காதுன்னு மட்டும் சொல்ல முடியும். பிடித்ததுன்னு குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
கிட்டதட்ட பறவை காய்ச்சல் மாதிரி இந்த பதிவும் படுபயங்கரமா பரவியிருக்கு. யார் எழுதினாங்கன்னு, யாரு எழுதலைன்னு தெரியல

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ? ராமின் “நாங்க போலீஸ்காரங்க” பதிவுகள். தமிழில் பதிவெழுதும் (எனக்கு தெரிந்த) ஒரேயொரு காவல்துறை அதிகாரி
வானவில் வீதியில் ரொம்ப பிடித்தது அவன் கல்லூரி பதிவுகள். தற்சமயம் பிடித்தது ‘தனிமையின் விலை’ தொடர்கதை :)

17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?
ஆம்! இதனால் நீங்க நாட்டுக்கு சொல்ல வருவது??? ;)

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சண்டையும் ஆபாசமும் இல்லாத படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன். அதொரு அற்புத அனுபவமாய் வாய்த்துவிட்டது

21.பிடித்த பருவ காலம் எது?
கோடை காலம்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு ஒன்றுமில்லை

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது சிரிப்பு சத்தம்.கூச்சலும் குழப்பமும் அமைதியற்ற சூழலும் மிகுந்த வேதனை தரும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருந்திருக்கலாம். ஆனால் எதையும் உணர்ந்து முழுமூச்சாக ஈடுபட்டதில்லை

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வன்முறை

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
புதுவை கடற்கரை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சமூகத்துக்கு உதவியாக

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவளை பற்றி நினைப்பது

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழுங்கள், வாழ விடுங்கள்

எதுக்குன்னே புரியாம இரண்டு கேள்விகள் இருந்துச்சு. அவற்றை சாய்ஸில் விட்டுட்டேன் :-) நட்சத்திர வாரத்திலா இந்த பதிவை எழுதுவது என்று கேட்டால், வழிவதை தவிர வேறு வழியில்லை எனக்கு!! தொடர்ந்து கேள்விகள் கேட்டல் என்னவோ எனக்கு பிடிப்பதில்லை. நீங்க எல்லாம் அப்படி தான் தேர்வுகள் எழுதி படிப்ப முடிச்சீங்களோன்னு கேள்வி வருவதுண்டு. அதனால் இந்த முப்பது கேள்விகள் கூட தாவு தீர்ப்பதாகவே இருந்தன. அதனால் தான் இப்படியொரு தலைப்பு :-))

16 க‌ருத்துக்க‌ள்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஜாலி பண்ணியிருக்கீங்க தல..,

ச.பிரேம்குமார் said...

நன்றி சுரேஷ். (நல்ல வேளை காலி பண்ணியிருக்கேன்னு எழதலீயே.. மகிழ்ச்சி :-))

ஆ.ஞானசேகரன் said...

உங்களை பற்றி அறிய சில வாய்ப்பு, நன்றி பிரேம்

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஞானசேகரன் :)

நட்புடன் ஜமால் said...

பிடிச்ச விசயத்தை மத்தவங்க தான் சொல்லனும்\\

பிடிச்சிருக்கு இந்த பதில்.

பக்கத்துல ஒரு பயபுள்ள என்னமா கடலை போடுறான். அப்படி என்னதான் பேசுவானுங்களோ? ;)\\ ஹா ஹா

பிடிக்காதது கோபமும் சோம்பேறித்தனமும்\\

பிடிக்காதது அவள் கோபம்\\

ஆ.சுதா said...

நீங்களும் கேள்வியில் மாட்டிட்டீங்களா!!!!

பதில் கலக்கல் பிரேம்!!

Raju said...

சிக்குச்சுடா சிறுத்தை...!
என்னைய எவ்ளோ கிண்டல் பண்ணுனீங்க...
நீங்களும் எழுதீட்டீங்கள்ள...!
It is All in the Game ya..!

கார்த்திகைப் பாண்டியன் said...

எளிமையான பதில்கள் பிரேம்.. நல்லா இருக்கு..:-)))))

Karthik said...

இவரை வாராவாரம் யாராவது நட்சத்திரம் ஆக்கினா தேவலாம். :)

Karthik said...

//பிடிச்ச விசயத்தை மத்தவங்க தான் சொல்லனும்

அடப்பாவமே, இன்னும் யாருமே ஓன்னைக் கூட சொல்லலையே?! :P

//என் கையெழுத்து அழகாக இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர்.

ஆம், ஆட்டோகிராப் நல்லா இருந்தது.

//பக்கத்துல ஒரு பயபுள்ள என்னமா கடலை போடுறான். அப்படி என்னதான் பேசுவானுங்களோ?

அவங்க சண்டை போட்டுக்கிடிருப்பாங்க. உலகம் கடலை போடுறானுங்கன்னு நினைக்குது. என்ன கொடுமை சார் இது?

கோபிநாத் said...

படித்தேன் ;)

Poornima Saravana kumar said...

பிடிச்ச விசயத்தை மத்தவங்க தான் சொல்லனும்\\

நல்ல பதில்:))

selventhiran said...

நண்பா, நட்சத்திர வாழ்த்துக்கள்.

ராம்.CM said...

அழகான பதில்கள்.ஆனால் சிறு தவறு?... "காவல்துறை அதிகாரி " அல்ல... காவல்துறை அங்கத்தினர்.

ச.பிரேம்குமார் said...

//அழகான பதில்கள்.ஆனால் சிறு தவறு?... "காவல்துறை அதிகாரி " அல்ல... காவல்துறை அங்கத்தினர்.//

அதிகாரின்னா பெரிய ஆபிசராத்தான் இருக்கனுமா ராம்? :)

DHANS said...

பக்கத்துல ஒரு பயபுள்ள என்னமா கடலை போடுறான். அப்படி என்னதான் பேசுவானுங்களோ? ;)


ithelam thevaiya???