6 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : அறிமுகம்

சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து, பின் பிரான்சின் பலகணி என்று சொல்லப்படும் புதுவையில் வளர்ந்தேன். கணினித்துறையில் பணி என்பதால் பெங்களூரில் சில காலம் கழித்துவிட்டு தற்போது சென்னையில் குடியேறியாகிவிட்டது.

கூட்டுப்புழுவாய் என் சிறு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். சமூக கோபங்களும், சமூகம் குறித்தான எண்ணங்களும் இருந்த போதிலும் பெரிதாக அதை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருந்ததில்லை. அல்லது பெரிதாக நான் முயன்றதில்லை. வலையுலக அறிமுகம் கிடைத்த பின் தான் என் உலகம் சற்று விரிய தொடங்கி இருக்கிறது. ஒத்த கருத்துடைய நண்பர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாள் தோறும் புதிதாக எதோ ஒன்றை கற்று கொண்டிருக்கிறேன். மனித மனங்களின் அழகையும், வக்கிரங்களையும் ஒரு சேர நாள் தோறும் எங்கேனும் காண கிடைத்து கொண்டே தான் இருக்கிறது.

இலக்கிய உலகம் கடலேனில் அதன் ஒரு கரைக்கு வெளியே நின்று கொண்டு அதன் அழகை கண்டு ரசிக்க துடித்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது ஆசையில் அதில் கால் நனைக்க நினைப்பதுண்டு. ஆனாலும் இன்னும் இறங்கி குளிக்கவும், அதன் ஆழங்களை அலசவும் முயன்றதில்லை. இன்னும் நிறைய காலம் தேவைப்படலாம்.
இந்த நட்சத்திர வாரத்தில் என் வலைப்பக்கங்களில் எழுதிப்பகிர என்ன காத்திருக்கிறது என்று தெரியவில்லை. மொழியோடு பயணிக்கும் என் பாதையில் இதொரு வசந்த காலமாய் இருக்கவும் செய்யலாம்.

முதன் முதலாய் வெங்கடேஷ் அண்ணாவை புதுச்சேரி வலைப்பதிவர் சந்திப்பில் தான் சந்தித்தேன். புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிக்கூடத்தில் வேலைகளுக்கு நடுவே நழுவி உணவகத்தில் அவசரமாய் உணவருந்தி வந்ததும், கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்களைப் போல் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததையும் மறக்க முடியாது தானே அண்ணா :-)

அப்போது தூரிகா வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்தார். திரட்டி.காம் வேலைகள் ஆரம்பித்திருந்தன. அப்போதே வாரம் ஒரு வலைப்பூ என்று ஒரு பகுதி வைக்கப் போகிறோம். உன் வலைப்பூ தான் முதலாவதாக இருக்கும் என்று சொன்னார். இடையில் சிறிது காலம் வேலைப்பளுவில் சிக்கி அவருடன் பேச இயலாது போனது. ஆனாலும் திரட்டி.காம் நட்சத்திரப்பதிவுகள் ஆரம்பிக்கும் போது முதல் மடலை எனக்கு அனுப்பி என் விவரங்கள் கேட்டார். அண்ணா, எத்தனை நன்றி சொன்னாலும் போதாது உங்களுக்கு. ஆனால் நீங்கள் கேட்ட விவரங்களை சரியான நேரத்திற்கு அனுப்ப இயலாது போனது. அதற்கான மன்னிப்பையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்(சொக்கா, திரட்டி.காம்’மின் முதல் நட்சத்திர பதிவர் அப்படீன்னு சொல்லிக்க முடியாதே :-)))

21 க‌ருத்துக்க‌ள்:

ஆ.ஞானசேகரன் said...

நட்சத்திர வாழ்த்துகள் பிரேம்

த.அகிலன் said...

வாழத்துக்கள் பிரேம்ஜி

Karthik said...

வாவ், கலக்கல் பதிவு பிரேம்!! வாழ்த்துக்கள்! :)

//த.அகிலன் said...
வாழத்துக்கள் பிரேம்ஜி

என்ன்ன கொடுமை சார் இது?? ;)

வெங்கடேஷ் said...

வாழ்த்துகள் பிரேம்!!

//கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்களைப் போல் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததையும் மறக்க முடியாது தானே அண்ணா :-)//

நிச்சயம் முடியாது பிரேம்

வெங்கடேஷ்

நட்புடன் ஜமால் said...

அடடா வடை போச்சேன்னு நினைக்க சொல்ல

ஆஹா!

இப்போதைய நட்ச்சத்திரம் தாங்கள் தானே எனும் போது போன வடை திரும்பி வந்து உட்கார்ந்துகிடிச்சி அதுவும் சூடாக.


வாழ்த்துகள் அண்ணே.

Suresh Kumar said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துகள் பிரேம்

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் மாப்பி ;)

\\பெரிதாக அதை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருந்ததில்லை. \\

டி நகரில் உங்கள் கோபங்களை வெளிப்படுத்த இடம் அமைத்து கொடுத்த போது எதுவுமே பேசமால் போனாது ஏன் என்ற கேள்வி இப்போதுஉ என் உள்ளத்தில் தோன்றுகிறது மாப்பி ;)!

டக்ளஸ்....... said...

நட்சத்திர வாழ்த்துகள்...

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள் நண்பரே...

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள் பிரேம்!
இலக்கியக் கடலில் கால்களையோ கைகளையோ நனைத்தாலும் அதற்கான விருப்பமும் உந்துதளுமே மேலானது.

சிறப்பக செயலாற்ற வாழ்த்துக்கள்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் பிரேம்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நட்சத்திர பதிவர் எப்போ எங்களுக்கு ட்ரீட் தரப் போறார்..:-))))))))

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பாஸ் :))

புதியவன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பிரேம்குமார்...

சேரல் said...

வாழ்த்துகள் பிரேம். திரட்டியின் நட்சத்திரப் பதிவாளரானதற்கு மின்னஞ்சலில் ஏற்கனவே வாழ்த்திவிட்டேன். இது, இந்த இடுகைக்கும், நட்சத்திர வாரத்தில் நீங்கள் எழுதப் போகும் மற்ற இடுகைகளுக்கும்.

-ப்ரியமுடன்
சேரல்

சொல்லரசன் said...

பதிவுலகத்திற்கு வரும் புது முகங்களை தேடிபோய் ஆதரவு கொடுக்கும் நீங்க,நட்சத்திரப் பதிவாளரானதற்கு வாழ்த்துகள்

vinoth gowtham said...

வாழ்த்துக்கள் நண்பா..

ச.பிரேம்குமார் said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி :)

திகழ்மிளிர் said...

வாழத்துகள்

anbudan vaalu said...

வாழ்த்துக்கள் பிரேம்....
:)))