குளிர் அலுத்துவிட்ட
பனிப்பிரதேசத்தின் சன்னலொன்றை
பிடிவாதமாய் தட்டுகிறது சூரியன்.
கண்ணாடிகளை ஊடுருவி
அறையை நிரப்பப் பார்க்கிறது வெம்மை.
அதிகரித்துக் கொண்டிருக்கும் கதகதப்பு
பிடித்தமானதாய் இருக்க
இனி மொத்தமாய் பனியை வெறுத்துவிட
துணிகிறேன்
அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று
கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது
- ச.பிரேம்குமார்
இதை எழுதி வெகு காலமாயிற்று. சில நெருங்கிய நண்பர்களுக்கு இந்த கவிதையின் வரிகள் ஏற்கனவே பழக்கமாகியிருக்கலாம். சஞ்சிகைகளுக்கு அனுப்பி பலனில்லாது போக மின்னஞ்சல் பெட்டியிலேயே கிடந்தது. புதிதாக எழுத இயலாமல் போகவே இதையிங்கு இட்டு நிரப்பிவிட்டேன்
9 June 2009
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : பனியில் கரைதல்
எழுத்து வகை: கவிதை, திரட்டி.காம் நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
25 கருத்துக்கள்:
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே
//அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று
கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது//
NICE...
நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே,..
//புதிதாக எழுத இயலாமல் போகவே இதையிங்கு இட்டு நிரப்பிவிட்டேன்//
கவிதை நல்லா இருக்கு
குளிர் அலுத்துவிட்ட
பனிப்பிரதேசத்தின் சன்னலொன்றை
பிடிவாதமாய் தட்டுகிறது சூரியன்.\\
அழகு வார்த்தைகள்
நல்ல துவக்கம்
நல்ல வர்ணனை.
இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று\\
மிகவும் இரசித்தேன்.
ஜீவராஜ், வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
மிக்க நன்றி ஞானசேகரன் அவர்களே :)
வாங்க ஜமால்! நலம் தானே? இந்தியப் பயணம் அருமையாகவே இருந்திருக்குமென நம்புகிறேன் :)
//அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று//
கவிதைப் பனியில் மனமும்
கொஞ்சம் கரைகிறது...
Simply Super prem...
மனதை வருடும் கவிதை பிரேம்!
வெங்கடேஷ்
//கவிதைப் பனியில் மனமும்
கொஞ்சம் கரைகிறது...//
மிகவும் நன்றி புதியவன் :)
மிக்க நன்றி டக்ளஸ் அண்ணே :)
//மனதை வருடும் கவிதை பிரேம்!//
மிக்க நன்றி வெங்கடேஷ் அண்ணா
:)
நல்லாயிருக்குது பிரேம்..
அருமையா இருக்கு பிரேம்.. வாழ்த்துக்கள்..:-))))))))
நல்லா இருக்கு ப்ரேம்
வாழ்த்துகள் பிரேம்
நல்லாயிருக்கு மாப்பி ;)
//அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று
கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது
சூப்பர்பா இருக்கு பிரேம்! :)
(நிஜமாவே புரியுது.)
//அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று
கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது//
நல்லா இருக்கு பிரேம்....
காலையிலே பட்டித்து.... இப்பதான் நேரம்!!!
நல்லக் கவிதை பிரேம். (அது பழையது புதியதுன்னு ஏன் பேதம்)
வாழ்த்துக்கள் நட்சத்திரம்.. :)
கவிதை கலக்கல்..
//இனி மொத்தமாய் பனியை வெறுத்துவிட
துணிகிறேன்//
நான் இதையே வெயில்னு மாத்தி போட்டு ஒரு கவிதை எழுதிக்கிறேன். (தலைநகரத்துல வெயில் ஓவருங்கோ..)
Post a Comment