12 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : காலயந்திரம்



காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை

திசைமரமோ வழிகாட்டியோ
இல்லாத கணங்கள் பயம்நிறைந்ததாய் இருக்கின்றன
வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே
போவதை துணிவென்று அறிவிக்கிறேன்

வனப்புமிகுந்த சோலைகளை தாண்டித்தான்
செல்கிறேன்ற போதிலும்
எதற்காகவும் நிற்பதாயில்லை
மீண்டும் அவற்றை கடக்க நேரிடுமென்றும்
நிதானிக்க நேரமில்லையென்றும்
சொல்லிக்கொள்ளலாம்

நினைவிலிருத்திக் கொள்ளமுடிந்தவைகளை
பயணத்தின் முடிவில் கட்டாயம்
குறித்து வைப்பதாய் முடிவு

இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை

23 க‌ருத்துக்க‌ள்:

கோவி.கண்ணன் said...

//இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை//

தொடர் பயணத்தில் சேரும் இட முகவரிகள் கிடையாது, வழிகளும் வழித்துணைகளும் கண்டிப்பாக உண்டு !
:)

Venkatesh said...

தொடர் பயணத்தில் சேரும் இட முகவரிகள் கிடையாது, வழிகளும் வழித்துணைகளும் கண்டிப்பாக உண்டு !

//
நெகிழ வைக்கறீங்க பிரேம்.

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கண்ணன் :)

ச.பிரேம்குமார் said...

வெங்கடேஷ் அண்ணா, நெகிழ வைத்தது நானா, கோவி.கண்ணனா?

இரண்டு பேர் சார்பிலும் உங்களுக்கு நன்றி :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஆகா..... ஏன் இப்படி? காலையிலேயே என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டீர்கள்.

- சேரிடம் இன்னதென்று தெரியாத இன்னொருவன்

நட்புடன் ஜமால் said...

வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே
போவதை துணிவென்று அறிவிக்கிறேன்\\


முடக்கப்பட்ட பூனை போல ...

கார்த்திகைப் பாண்டியன் said...

அசாதாரணமான கேள்விகளை எழுப்பும் கவிதை.. அருமை பிரேம்..

Karthik said...

attakasam prem!

ur poem raises very uncomfortable questions on our so called modern lifestyles. very nice! :)

ராம்.CM said...

அருமை...

ச.பிரேம்குமார் said...

//- சேரிடம் இன்னதென்று தெரியாத இன்னொருவன்//

பலரும் அப்படித்தானே இருக்கிறோம் சேரல்

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜமால் :)

ச.பிரேம்குமார் said...

//அசாதாரணமான கேள்விகளை எழுப்பும் கவிதை../

நன்றி பாண்டியன் :)

ச.பிரேம்குமார் said...

கார்த்திக் & ராம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோபிநாத் said...

\\இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை\\

ம் ;)

நாடோடி இலக்கியன் said...

\\இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை\\

ரொம்ப பெரிய விஷயத்தை நான்கே வரியில் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

//இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை//
ஓ தொடர் பயணமாக இருக்கும்

Poornima Saravana kumar said...

அருமை

//காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை
//

மேவி... said...

"காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை"

முடிவு தெரிந்த வாழ்க்கை தானே .......
போகும் இடம் தெரிந்த பின் போகிறது பற்றி என்ன கவலை

"நினைவிலிருத்திக் கொள்ளமுடிந்தவைகளை
பயணத்தின் முடிவில் கட்டாயம்
குறித்து வைப்பதாய் முடிவு"

கல்லறை மீது தானே ......
வாழும் போது செய்தலாவது உபயோகம் உண்டு.....

மேவி... said...

enakkum oru blog irukku sir

ny said...

பூங்கொத்து.. நட்சத்திரப் பதிவருக்கு!!
மொழியின் வழியில் வருகிறேன் நானும்!!

ஸ்ரீவி சிவா said...

நல்லா இருக்குது பிரேம்...

//காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை
//
துவக்கமே நல்ல வரிகள்.

prabha devi said...

உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது .என் வாழ்த்துக்கள் ..........

Chandravathanaa said...

நன்றாயிருக்கிறது கவிதை.
வாழ்த்துக்கள்.
கல்கியில் இது பிரசுரமானதற்கு இன்னோரு வாழ்த்து.