10 November 2006

க‌ட‌லை போட்டுப்பார்

'காதலித்துப்பார்'க்க சொன்னார் வைரமுத்து. கடலை போட்டுப்பார்த்தால் எப்படியிருக்கும்?

க‌ட‌லை போட்டுப்பார்

உன்னை நீயே
அழகாய் காண்பாய்;

பேச்சில் சுவை கூடும்
ரசனைகள் மாறும்

அவ‌ச‌ர‌மாய் ஆங்கில‌ம்
க‌ற்பாய்;
அக‌ராதி துணையுட‌ன்
அகதா கிறிஸ்டி படிப்பாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

*

இர‌வுக்கும் ப‌க‌லுக்கும்
வித்தியாச‌ம் ம‌றப்பாய்;

மனிதத் தனிமை
சுகமென்பாய்,
தொலைபேசி துணையில்
இன்புறுவாய்.

செல்பேசிச் சூட்டிலே
வார்த்தைகள் உருகும்
குறுந்த‌கவ‌ல் அனுப்பியே
க‌ட்டைவிர‌ல் தேயும்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

*

நாளின் நீள‌ம்
குறைவென்பாய்
பத்து நிமிட அலுவலும்
பளுவாய் படும்.

காத‌ல் பாட‌ல்க‌ள்
மட்டுமே இசையாகும்;
க‌விதை எழுத
புறப்ப‌டுவாய்.

ஆள் பாதி,
ஆடை பாதி;
மேன்மையான‌ நீதியென்று
மெனக்கெடுவாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

5 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

இர‌வுக்கும் ப‌க‌லுக்கும்
வித்தியாச‌ம் ம‌றப்பாய்;

மனிதத் தனிமை
சுகமென்பாய்,
தொலைபேசி துணையில்
இன்புறுவாய்.

செல்பேசிச் சூட்டிலே
வார்த்தைகள் உருகும்
குறுந்த‌கவ‌ல் அனுப்பியே
க‌ட்டைவிர‌ல் தேயும்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

நல்ல கற்பனை வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

Great Work Prem . Really njoyed
Proud to be your friend !!!!!

Regards
Guna

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி காண்டீபன் & குணா

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி காண்டீபன் & குணா

cheena (சீனா) said...

செல்பேசிச் ஏற்றிய சூட்டினால் - கைவிரக்கள் தேய அனுப்பிய குறுஞ்செய்திகள் -

பிரேம் - கடலை போட்ட அனுபவம் - ஒரு பதிவு போட வேண்டியது தானே