பிட்சாவையும் பர்கரையும்
சுவைக்கயிலும்
அம்மா வைக்கும்
கருவாட்டுக் குழம்பை
நினைத்து
நா ஊறுகையில்;
அழுக்கு ஜீன்ஸை
ஆயிரம் ரூபாய்க்கு
வாங்கிவிட்டு
ஆட்டோக்காரனிடம்
ஐம்பது பைசாவுக்கு
சண்டையிடுகையில்;
சாலையோர
சல்வாரையும் மிடியையும்
ரசித்துவிட்டு
சகோதரிக்கு மட்டும்
சேலையை தேர்ந்தெடுக்கையில்;
அவ்வப்போது
எட்டிப்பார்த்து விடுகிறான்
மென்பொறியாளன்
போர்வைக்குள்ளிருக்கும்
கிராமத்தான்!
27 November 2006
எனக்குள் ஒருவன்
எழுத்து வகை: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
9 கருத்துக்கள்:
Very nice.Its natural for all guys.Very Very Good.Write more.
நன்றி அனானி.. நீங்கள் யார் என்று சொல்லியிருக்கலாமே
சிந்தனையை ரசிக்கிரேன்!
சிந்தைக்குள் சுவைக்கிரேன்!
சிற்றின்பம் பேரின்பம்
இரண்டும் தெளிக்கும்
உன் கவிதையில், சில நேரம்
நான் சொல்ல நினத்தும், சில நேரம் நான் சொல்ல நினைக்காததையும் கண்டு
ரசிக்கிரேன்! சுவைக்கிரேன்!
மிக்க நன்றி முகுந்தன். நீங்கள் சொல்ல நினைத்தவைகளை பார்க்க நினைத்தால் கிடைக்கவில்லையே...
/மென்பொறியாளன்
போர்வைக்குள்ளிருக்கும்
கிராமத்தான்!/
என்னைக் கட்டிப்போட்டு விட்ட வரிகள். உங்களுடைய இந்த கவிதை என் மனதினுள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
என் மனமார்ந்த பாராட்டுகள்.
நன்றி நந்தா. இந்தக் கவிதையின் உள்ளர்த்தம் உங்களுக்கு புரிந்ததற்கும் பிடித்ததற்கும் மிக்க மகிழ்ச்சி
hello prem - kavithai really nice - nice enpathaivida, unkalin or generally ella youngester lum ithai polathan enta manavottam pirathipalika pattirukirathu - manithanin chinna chinna enna ottankalai palichinnu ....
baskar
மிகவும் அருமையான கருத்தோடு இடணைந்த கவிதை
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்திரவதனா
Post a Comment