எனக்குப் பிடித்த, என்னைப் பாதித்த நட்பு கவிதைகள் சில...
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
-
கவிஞர் அறிவுமதி
(கவிதை தொகுப்பு : நட்புக்காலம்)
நீ வயசுக்கு வந்துபோது
தடுமாறிய
என் முதல் கூச்சத்திற்கு
குட்டு வைத்து
நம் நட்பை காப்பாற்றியவள் நீ
-
கவிஞர் அறிவுமதி
(கவிதை தொகுப்பு : நட்புக்காலம்)
கவிஞர் அறிவுமதி
(கவிதை தொகுப்பு : நட்புக்காலம்)
எங்கு...
எப்படி...
எப்பொழுது தொடங்கியது
என்று தெரியாத
எல்லைகளற்ற நெடுவானம்
நம் நட்பு.
- எழில்
7 கருத்துக்கள்:
/கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்/
நட்புன்னு சொன்னா எனக்கு உடனே ஞாபகம் வர்ற கவிதை இது!
எனக்கு பிடித்த தொகுப்பு பிரேம் ;)
நட்புக்காலம் ரெண்டு வாங்கிட்டீயா மாமா?
நட்புக்காலங்கள்னு மாத்திட்ட கவிதைத்தொகுப்பு பெயரை???
வாங்க கென்,
முதலில் தொகுப்பு பெயரில் உள்ள பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. மாற்றிவிட்டேன்.
அப்புறம் ஏற்கனவே நட்புக்காலம் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை சில நாட்களுக்கு முன் பதித்திருந்தேன். அதனால் தான் இது 'நட்புக்காலம்~2'. இரண்டாவது தொகப்பு வந்தா அதையும் வாங்கிடுவோம்ல :)
பிரேம்,
பெரும்பாலான கவிதைகள் அனைத்துமே மனதார ஒத்துக்கொள்ளக் கூடிய வகையில் இருப்பவை அறிவுமதியின் 'நட்புக்காலம்' தொகுப்பில்.
நான் ஏற்கெனவே எனது வலைப்பூவில் இரண்டு சுட்டிகள் இட்டிருக்கிறேன்
http://kavithaikealungal.blogspot.com/2007/04/1.html
http://kavithaikealungal.blogspot.com/2007/05/2.html
உங்கள் பதிவில் இரண்டாம் கவிதை தான் தொகுப்பில் முதல் கவிதை!!
படித்த உடனே முதுகுக்குப் பின்னே ஒரு தோழி மறைந்திருந்து குட்டு வைப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும் கவிதை!!
எங்கு...
எப்படி...
எப்பொழுது தொடங்கியது
என்று தெரியாத
எல்லைகளற்ற நெடுவானம்
நம் நட்பு.
karpanaiyil nantaga ullathu, but in reality, is it true one
v
Post a Comment