8 August 2007

இப்படிக்கு நட்பு - 3



முதன்முதலாய் பார்த்துக்கொண்டது,

பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,

அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,

உன் அருகாமை இல்லாத‌
பொழுதுகளில் தவித்துப்போனது,

இவையெல்லாம் நடந்தேறிய‌
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!

இப்படிக்கு,
நட்பு

10 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

\\\நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!\\

ம்...அப்போ வேற எதுக்கு தேவை பிரேம் ;-))

ச.பிரேம்குமார் said...

என்ன கோபிநாத், இப்படி கேட்டுட்டீங்க? காதலிக்கிட்டயோ, மனைவிக்கிட்டயோ இப்படி தேதிகள மறந்துட்டு போயி நில்லுங்க... அன்னிக்கு இருக்கு கச்சேரி ;)

Anonymous said...

unmaithan..
nadpukku thevai, kilamyaiyo or thethiyo alla - nadpukku thevai
ententum nadpu
vij

Raghavan alias Saravanan M said...

//இவையெல்லாம் நடந்தேறிய‌
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!//

சில நேரங்களில் நம் நினைவுகளைப் பரிசோதித்துப் பார்க்கையில் இவை நிச்சயமாகத் தேவைப்படும் விடயங்கள் என்பது என் தாழ்மையான கருத்து!!

உரிமையோடு திட்டி, உள்ளன்போடு நினைவுகூர்ந்து, உறவுகளை மேம்படுத்தும் காரணிகளில் இதுவும் ஒன்றல்லவா கவிஞரே?

Dhivya said...

hai ,
it's realy touch my heart!
all the best.
keep it up!
we r waiting for ur new poems!
please fast!
i am very eager!

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி அன்பு. கண்டிப்பாய் தொடர்ந்து எழுத முயல்கிறேன்

ச.பிரேம்குமார் said...

//உரிமையோடு திட்டி, உள்ளன்போடு நினைவுகூர்ந்து, உறவுகளை மேம்படுத்தும் காரணிகளில் இதுவும் ஒன்றல்லவா கவிஞரே//

தேவைதான் ராக்ஸ், இருப்பினும் நட்பு கொஞ்சம் தாராள குணம் கொண்டது. அவ்வளவாய் கண்டுக்கொள்ளாது. முதலில் கோபித்தாலும், சீக்கிரத்திலேயே சமாதானம் அடைந்துவிடும் :)

Karthik said...

வாவ், சூப்பரா இருக்குங்க பிரேம்.
:)

ச.பிரேம்குமார் said...

//Karthik said...
வாவ், சூப்பரா இருக்குங்க பிரேம்.
:)
//

மிக்க நன்றிங்க கார்த்திக் :)

Karthik said...

//மிக்க நன்றிங்க கார்த்திக் :)

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

என்ன கொடுமை ஸார் இது?