7 August 2007

பதிவர் பட்டறை : ஒரு ஆறிப்போன பார்வை

சென்னை பதிவர் ப‌ட்ட‌றை ஆகஸ்ட் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று இனிதே நடந்து முடிந்தது. உடனுக்குடன் பட்டறை பற்றிய செய்திகளை ஏற்கனவே மக்கள் தந்துவிட்டதால் இது ஒரு 'ஆறிய' ப்போன‌ பார்வை.

மாலன், 'கிழக்கு பதிப்பகம்' பத்ரி, ஆசிப் மீரான், 'எ-கலப்பை' முகுந்த், பொன்ஸ், வினையூக்கி, பினாத்தல் சுரேஷ், ஜே.கே., வ.வா.சங்கத்தின் சிங்கங்கள் என்று ஏகப்பட்ட பரிச்சயமான பெயர்களின் முகங்கள் எனக்கு அப்போது தான் பரிச்சயமாயின.

தகடூர் கோபி, 'முத்த'தமிழ் வித்தகர் நந்தா, நவீன் பிரகாஷ் எல்லாம் ஏற்கனவே அறிமுமாயிருந்த‌ பதிவர்கள். அவ்வப்போது அவர்களுடன் மொக்கை போடவும் நேர்ந்தது.

பட்டறை ஆரம்பித்ததிலிருந்து நிகழ்வுகளை ஒருவர் வளச்சு வளச்சு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்... அட, அது நம்ம அருள்குமார் ;)

கணித்தமிழ் வந்தபின் உருவான எழுத்துருக்கள் பற்றியெல்லாம் ஒரு சின்ன அறிமுகத்தோடு, எ~கலப்பை பற்றி விளக்கினார் முகுந்த்

TAB, TAM போன்ற பல்வேறு எழுத்து வடிவங்களில் உள்ள வலைத்தளங்களை பிரச்சனையின்றி தன் நீட்சி மூலம் யூனிக்கோடில் படிப்பது எப்படி என்று விளக்கினார் கோபி

(சந்தடி சாக்கில், தன் கணிணியில் சானியா மிர்ஸா படத்தை சரியாக தரவிறக்கம் செய்ய முடியாததற்கு ஏதாவது செய்ய முடியுமா என்ற பெரிய சந்தேகத்தை கேட்டார் செந்தழலார்

ச‌மீப‌கால‌மாக‌ த‌ன் இம்சை வ‌லைப்பூவின் மூல‌ம் மொக்கை ம‌ட்டுமே போட்டுக்கொண்டிருந்த‌ செந்த‌ழ‌ல் ர‌வி ப‌ட்ட‌றையில் ந‌ல்ல‌பிள்ளையாக‌ வ‌ந்திருந்த‌ புதிய‌வ‌ர்க‌ளுக்கு HTML ப‌ற்றி சொல்லிக்கொண்டிருந்தார். ந‌ல்ல‌ வேளையாக‌ ப‌திவுக‌ளில் மொக்கை போடுவ‌து எப்ப‌டி என்று அவ‌ர்க‌ளுக்கு சொல்லிக்கொடுக்க‌ வில்லை. த‌ப்பிச்சோம்டா சாமி !

வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளின் ச‌மூக‌ அக்க‌றை ப‌ற்றி விவ‌ரித்தார் ர‌ஜினி ராம்கி
வ‌லைப்ப‌திவில் வித்தியாச‌மான‌ முய‌ற்சிக‌ள் என்ற த‌லைப்பில் 'ச‌ற்றுமுன்','த‌மிழூற்று' மற்றும் ப‌ல‌ கூட்டுப்ப‌திவுக‌ள் ப‌ற்றி விள‌க்கினார் பொன்ஸ்

வ‌.வா.ச‌ங்க‌த்தின் சிங்க‌ங்க‌ள் எல்லாம் 'ச‌ங்க‌த்தின்' சின்ன‌ம் பொறித்த‌ டி.ச‌ட்டைக‌ள் அணிந்து அர‌ங்க‌ம் முழுவ‌தும் சுற்றித்திரிந்து க‌ர்ஜித்துக் கொண்டிருந்த‌ன‌ர்

புதிதாய் 100 பேரையாவ‌து வ‌லைப்ப‌திய‌ வைத்துவிட்டால் அது இந்த‌ ப‌ட்ட‌றையின் வெற்றியாக‌ இருக்கும் என்று த‌ன் முடிவுரையில் குறிப்பிட்டார் பால‌பார‌தி. ம‌திய‌த்திற்கு முன்பாக‌வே சுமார் 115 வ‌லைப்ப‌திவ‌க‌ளை புதிதாய் வ‌ந்திருந்த‌ ந‌ப‌ர்க‌ளுக்காக‌ ப‌திவு செய்த‌தாய் ஒரு ப‌ட்சி சொல்லிற்று.

எல்லாரையும் வ‌ள‌ச்சு வ‌ளச்சு போட்டா எடுத்தேன். ஹீம்... கேம‌ராக்கு எட்டுன‌து க‌ணிணிக்கு எட்ட‌லை. (டேட்டா கேபிள‌ காணோம்பா) :(

வ‌ந்திருந்த‌ ஆர்வ‌மான‌ கூட்ட‌த்தை பார்க்கும் போது க‌ண்டிப்பாக‌ ப‌ட்ட‌றையின் நோக்க‌ம் பெரித‌ள‌வுக்கு நிறைவேறிய‌து என்றே சொல்ல‌ வேண்டும்.

ப‌ட்ட‌றையை ந‌ட‌த்திய‌ அத்த‌னை பேருக்கும் ந‌ன்றிக‌ளும் வாழ்த்துக்க‌ளும்.

வாழ்க‌ த‌மிழ் ! வ‌ள‌ர்க‌ ந‌ல்ல‌ த‌மிழ் வ‌லைப்ப‌திவுக‌ள் !

8 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

பிரேம்

ஆறிப்போனாலும்...சுவையுடன் சொல்லியிருக்கிங்க...நன்றி ;-)

பிரேம்குமார் said...

மிக்க நன்றி கோபிநாத் :)

செந்தழல் ரவி said...

நல்ல போஸ்ட் !!!!

படங்கள் எங்கேப்பா ????

பிரேம்குமார் said...

வாங்க ரவி,

முதன் முதலா இந்தப்பக்கம் வந்துருக்கீங்க...

அதான் சொன்னேனே தலைவா, என் கேமராவோட DATA CABLE'ல எங்கே போட்டேன்னு தெரியல :(

நீங்க சொல்லிக்குடுக்கற மாதிரி கூட ஒரு அட்டகாசமான படம் எடுத்தேன். சீக்கிரமே பதிவு செய்திடுறேன் :)

அருட்பெருங்கோ said...

படத்த மொதல்ல போடுப்பா...

பட்டறைக்கு வராமப் போனதுல கொஞ்சம் பீலிங்தான் :(

அருள் குமார் said...

//மத்தபடி யாருக்கும் என்னை தெரியவில்லை.. //

என்னைச் சந்தித்துப் பேசியதை மறந்துவிட்டீர்களா ப்ரேம் குமார்?!

பிரேம்குமார் said...

அருள்,அவசர அவசரமா பதிவு போட்டதால வந்த வினை இது :((

பிரேம்குமார் said...

Test Comment :(