ஆரம்பத்திலிருந்து கடைசிவரை
எல்லாம் ஒழுங்காயிருக்கிறதா?
வழக்கம்போல குசலம்விசாரிப்பு
குறையில்லாமல் உள்ளதா?
அங்கங்கே கவனிக்கப்படாமல்
உள்ளனவா சில சந்திப்பிழை,
எழுத்துப்பிழை, பொருட்பிழைகள்?
மரியாதை குறையாமல்
வழங்கப்பட்டிருக்கிறதா?
எழுத்துக்களின் நேர்த்தி எவ்விதம்?
சுருங்கச் சொல்லி விளக்கும்
விதம் கையாளப்பட்டுள்ளதா?
உடனடியாகப் பதில்வரும்
யுத்தி உள்ளிருக்கின்றதா?
பயனில்லாத விஷயங்கள்
அலசப்பட்டிருக்கின்றவா?
இப்படி எவ்விதக் கவலையும்
ஒருபோதும் இல்லாது
எப்போதும் களிப்புடன் செல்கிறது
இரு நட்புள்ளங்களுக்கிடையேயான
உள்ளார்ந்த அன்புடன் கூடிய
உணர்வுப்பகிர்தலுக்கான மடல்!!
-
நட்பு மடல்
ராகவன் (அ) சரவணன்
கவிதை கேளுங்கள்
13 August 2007
நட்பின் நட்பு - 2
எழுத்து வகை: நட்பின் நட்பு, நட்பு
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துக்கள்:
ம்..ரொம்ப சரி ;-))
கவிதை நல்லா இருக்கு பிரேம் ;-)
\\நட்பு மடல்
ராகவன் (அ) சரவணன்\\
யாரு இது?
வாங்க கோபிநாத்,
வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றி. ராகவன் (எ) சரவணன் நான் நட்பு பாராட்டும் ஒரு சக பதிவர். அவர் வலைப்பூவின் சுட்டியும் இந்த பதிவில் இருக்கிறதே
the last one, muthaaippaga
nadpu entaal ipadithan irukkanum enta -v
நன்றி பிரேம்.
மிக்க மகிழ்ச்சி.
கவிதைக்கான நேரடிச் சுட்டி இதோ: http://kavithaikealungal.blogspot.com/2007/06/blog-post.html
Post a Comment