அது நான் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்த நேரம். கல்லூரித் தேர்தலுக்காக விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய நாள். மூன்றாமாண்டு வணிகவியல் மாணவரும், மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவரும் தான் மாணவர் பேரவைத் தலைவர் போட்டிக்கான முக்கிய போட்டியாளர்கள். தங்கள் துறை மாணவர் தேர்தல் போட்டியில் இருக்கிறார் என்பதில் கணிப்பொறியியல் துறைக்கே பெருமையாகத்தான் இருந்தது. இருப்பினும் வழக்கம் போல் வகுப்புகள் நடந்துக்கொண்டிருந்தன.
பெருந்திரளாக வகுப்பறைக்குள் நுழைந்த கூட்டமொன்று அன்று வகுப்புகளை நடத்த தேவையில்லை என்று வலியுறுத்தினர். தேர்வு நெருங்குகிற காரணத்தால் வகுப்புகளை நிறுத்த முடியாது என்று விரிவுரையாளர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வகுப்புகளை விட்டு எல்லோரையும் வெளியேற்றினர். மாணவர்கள் வெளியே வந்து ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு வேன் அங்கு வந்து நின்றது.
'ஏன் டா, எங்களை எதிர்த்து போட்டி போடுவீங்களா? நாங்க எவ்வளோ பணம் செலவழிச்சிருக்கோம் தெரியுமா? எங்களுக்கு *** கட்சி ஆதரவு இருக்கு தெரியுமா? எங்களை வெல்ல முடியுமா?' என்று அறைகூவல் விடுத்தார்கள் வேனில் இருந்து இறங்கியவர்கள்.
சடசடவென அங்கிருந்த எதிரணி மாணவர்களை அள்ளி வண்டியில் அடைக்க துவங்கினார்கள். சிதறிய ஓடிய கூட்டத்தில் யார் அகப்பட்டார்கள், யார் தப்பித்தார்கள் எனத்தெரியவே கொஞ்ச நேரம் பிடித்தது.
கல்லூரியில் இருந்த கிளம்பிய வண்டி நகரத்தின் முக்கியப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்சியின் அலுவலகத்தின் முன் நின்றது. முதல் மாடியில் பல மாணவர்கள் ஏற்கனவே குவிக்கப்பட்டு இருந்தார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கபடுவார். அவர்கள் எல்லோரும் வாக்களித்து தான் மாணவர் பேரவைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். ஆக, அந்த குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிக்கும் அனைத்து பிரதிநிதிகளும் அங்கே சகல வசதிகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார்கள். தேர்தல் நாளன்று அங்கிருந்து எல்லோரும் அழைத்துச்செல்லப்பட்டு அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை பதிவார்கள்.
அப்போது பிடித்துக்கொண்டு வரப்பட்ட கணிப்பொறித்துறை மாணவர்கள் மட்டும் பினைக்கைதிகளை போல நடத்தப்பட்டார்கள். வணிகவியல் துறை மாணவன் ஒருவன் வந்து மிரட்டினான். 'ஏன் டா? நீங்க எல்லாம் படிக்கிற பசங்க தானே? உங்களுக்கு எதுக்கு இந்த வீண் வேலை? என் நண்பன் தான் வேட்பாளனா நிக்கிறான். அவனுக்கு இன்னும் நாலு மாசத்துல திருமணம். அப்போ அழைப்பிதழ்'ல அவன் பெயருக்கு பக்கத்தில் இந்தக் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர்னு போட்டா எப்படி இருக்கும்? அதுக்கு தானே நாங்க எல்லாம் அவனுக்கு ஆதரவா இருக்கோம். இதுக்காக அவன் எவ்வளவு செலவு செய்திருக்கான் தெரியுமா? " என்று அடுக்கிக்கொண்டே போனான். கூறியவன் வேறு யாருமல்ல. அத்தனை நாட்கள் அந்த கணிணித்துறை மாணவர்களோடு ஒன்றாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவன் தான்.
அன்றைய நாள் அந்த கணிப்பொறித்துறை மாணவர்களுக்கு ஒருவித பயத்துடனும் பதற்றதுடனுமே போய்கொண்டிருந்தது. ஆனால் எல்லோரும் நம் கல்லூரி மாணவர்கள் தானே என்ற ஒரு நம்பிக்கையில் நேரத்தை போக்கிக்கொண்டிருந்தார்கள். மாலை எதிரணியினர் அவர்களுக்குள்ளாகவே ஏதோ பேசிக்கொண்டு அந்த மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். வழக்கமாக கல்லூரி முடிந்து போவது போல் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.
அந்த மாணவர்களின் பெற்றோருக்கு நடந்தவை தெரிந்த போது காவல்துறையிடம் சொல்லலாமா என்று கேட்டார்கள். ஆனால் எல்லோரும் தங்கள் கல்லூரி மாணவர்கள் தான், நண்பர்கள் தான். தேர்தல் முடிந்ததும் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி அன்றோடு அந்த நிகழ்வையே அனேகமாய் எல்லோரும் மறந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் எங்கள் கல்லூரியில் தேர்தல் நடக்கிறதா என்பது கூட கேள்விக்குறி தான். இப்போது மிகவும் கண்டிப்புடன் செயல்பட தொடங்கிவிட்டார்கள் என்று அறிகிறேன்.
சட்டக்கல்லூரியில் நடந்து நிகழ்வுக்கு பின்னே, இதை கட்டாயம் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பு தள்ளிக்கொண்டே போன ஒரு நாளில், கல்லூரி படத்தையும் பார்க்க நேர்ந்தது. அரசியல்வாதிகளின் அரக்க குணத்தினால் தீக்கிரையாகிப்போன மாணவிகளை நினைத்தால் இன்றும் கூட நெஞ்சம் பதைபதைக்கிறது.
இவையெல்லாவற்றையும் பார்த்துவிட்டு, அந்த தேர்தல் நேரத்தை நினைத்துப் பார்த்தால், அப்போது இல்லாத பயம் இப்போது கொஞ்சம் எட்டிப்பார்கிறது.மாணவர்கள் அரசியலில் இறங்குவது குறித்த கருத்து ஒரு புறம் இருக்கட்டும், மாணவர்களுக்குள் அரசியல் புகலாமா என்பது பெருங்கேள்வி?
மாணவர் தேர்தலிலேயே கடத்தல், ஆள் சேர்ப்பு, பண பலம் போன்றவற்றை நம்புவர்கள் பிந்நாளில் பொது அரசியலுக்கு வந்தால் என்னாவது? மாணவப் பருவத்திலேயே இப்படிப்பட்ட செயல்களில் இவர்களை ஈடுபட செய்தது எது? தூண்டியது யார்? இத்தகைய அரசியல் சூழலுக்குள் தங்கள் பிள்ளைகள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர் தான் விரும்புவார்கள்?
30 December 2008
மாணவர்களும் அரசியலும்
பதித்தது : ச.பிரேம்குமார் 25 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
3 December 2008
அழகான நாட்கள்
அப்போது தான் நிதிலாவுக்கும் முருகனுக்கும் திருமணம் முடிந்திருந்தது. புகுந்த வீட்டிற்கு கிளம்பும் முன் மகிழ்ச்சியும் கண்ணீரும் கலந்த கண்களோடு அம்மாவை வந்து கட்டிக் கொண்டாள் நிதிலா. அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கையில் ஒரு வங்கிக் கணக்கு புத்தகத்தை தந்தார் அம்மா.
'உன்னோட கல்யாண வாழ்க்கை பற்றிய குறிப்பா இருக்கட்டும் இந்த வங்கிக்கணக்கு. இப்போ உன் கல்யாணம் நடந்த இந்த மகிழ்ச்சியான நேரத்துல இதுல ஆயிரம் ரூபாய் போட்டு ஆரம்பிச்சுருக்கேன். ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தின் போது நீ இதுல கொஞ்சம் பணம் போடு. கூடவே அந்த நிகழ்ச்சி பத்தியும் ஒரு குறிப்பு எழுதி வச்சுக்கோ' என்றார் அம்மா
நிதிலா இதை பற்றி முருகனிடம் கூறிய போது அவனுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அடுத்த மகிழ்ச்சியான தருணம் எப்போது வரும் என காத்திருந்தார்கள்.
சிறிது காலத்திற்கு பிறகு அவர்கள் வங்கிக்கணக்கு புத்தகத்தில் கீழ்கண்ட குறிப்புகள் இருந்தன :
28 செப்டம்பர், 1997 - 500 ரூ - முதல் சுற்றுலா
15 அக்டோபர், 1997 - 1000 ரூ - முருகனுக்கு பதவி உயர்வு கிடைத்தது
05 நவம்பர், 1997 - நிதிலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்
17 ஜனவரி, 1998 - 1000 ரூ - நிதிலா கருவுற்றாள்
18 செப்டம்பர் 1998 - 2000 ரூ - அன்புச்செல்வன் பிறந்தான்
இவ்வாறு நீண்டு கொண்டே போனது குறிப்புகள்.
சில காலத்திற்கு பிறகு வழக்கமான ஊடல்களும், சண்டைகளும் சற்று பெரிதாக துவங்கின. தொடங்கும் வேகத்திலே முடியும் சண்டைகள் நாட்கணக்கில் நீளத் துவங்கின. நிறைய நாட்கள் பேசாமல் இயந்திரத்தண்மையுடன் கழிந்தன.
இனி பயனில்லை என்று முடிவு செய்த ஒரு மாலைப் பொழுதில் தன் அம்மாவிற்கு தொலைபேசினாள் நிதிலா. 'அம்மா, இனியும் என்னால பொறுத்துக்க மூடியாதும்மா. இப்படிப்பட்ட மனுஷன் கூட வாழ்க்கை நடத்துறதே கொடுமை. விவாகரத்து செய்திடலாம் என்று முடிவு செய்துட்டேன்' என கூறினாள்.
'நீ சொல்றது சரிதான் கண்ணா. விவாகரத்துக்கு ஏற்பாடு செய்திடலாம். ஆனால் ஒரு விசயம். உன் கல்யாணத்தின் போது நான் கொடுத்து வங்கிக்கணக்கு நினைவு இருக்கா? அதுல இருக்க பணத்தை எல்லாம் எடுத்து செலவு பண்ணிடு. இந்த திருமணத்தின் நினைவா அது எதுக்கு இருக்கனும்?'
நிதிலாவுக்கு அது சரியெனவே பட்டது. அந்த கணக்கை மூடுவதற்கு வங்கிக்கு செல்லத் தயாரானாள். எதேச்சையாக அந்த புத்தகத்தை புரட்டிய போது அதில் இருந்த குறிப்புகள் கண்ணில்பட அவற்றை படிக்க துவங்கினாள். மீண்டும் மீண்டும் படித்தாள். தாங்கள் வாழ்ந்த அழகான நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. கண்ணீர் பெருக்கெடுத்தது.
முருகன் வந்தவுடன் அந்த கணக்குப் புத்தகத்தை அவனிடம் கொடுத்து அந்த கணக்கில் இருக்கும் பணத்தை எல்லாம் விவாகரத்திற்கு முன் செலவு செய்ய சொன்னாள்.
அடுத்த நாள் நிதிலாவிடம் முருகன் அந்த புத்தகத்தை நீட்டிய போது அதில் புதிதாய் ஐந்தாயிரம் ரூபாய் சேர்ந்திருந்தது. 'நாம் எத்தனை மகிழ்ச்சியாய் நம் வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம் என்று இன்று உணர்ந்துக் கொண்டேன். நீ எத்தனை மகிழ்ச்சியை என் வாழ்வில் சேர்த்திருக்கிறாய். நான் இனி எப்போதும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்' என்று ஒரு குறிப்பும், இல்லை காதல் கடிதமும் இருந்தது.
இருவரும் கட்டித் தழுவிக்கொண்டு அழத்துவங்கினார்கள்.
முருகன் ஓய்வு பெறும் வரை அந்த கணக்கில் எத்தனை ரூபாய் சேர்ந்திருந்தது தெரியுமா? அது கிடக்கட்டும்... நமக்கெதற்கு?
'ஒவ்வொரு முறை நாம் வீழும் போதும், எங்கே விழுகிறோம் என்று பார்க்காமல், எங்கிருந்து தவறினோம் என்று ஆராயத் தொடங்கினால் வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்'
பி.கு. : மடலில் வந்த ஒரு ஆங்கிலக்கதையின் தமிழாக்கம்
பதித்தது : ச.பிரேம்குமார் 46 கருத்துக்கள்
எழுத்து வகை: காதல், மொழிபெயர்ப்பு
1 December 2008
உங்களுக்கும் மனப்பிறழ்வு இருக்கக்கூடும்
கலைச்செல்வி அழகான இளம் பெண். இப்போது தான் ஒரு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு தமிழ் இலக்கியம் சேர்ந்திருக்கிறாள். மகிழ்ச்சியாய் போய் கொண்டிருந்த அவள் வாழ்வில் திடீரென ஒரு இடி. வெகு காலமாய் நோய்வாய் பட்டிருந்த அவளது தாயார் காலமானார்.
செல்விக்கு எல்லாமும் சூனியமாகிவிட்டதாகத் தோன்றியது. பித்துப் பிடித்தாற் போல் அமர்ந்திருந்தாள்.எல்லோரும் அவளுக்கு ஆதரவாக பேசிப் போனார்கள். ஆனால் அவள் மனம் அமைதியடையவே இல்லை. இறுதிச்சடங்கிற்கு வந்த ஒரு இளைஞனை அவளை நோக்கி வந்தான். செல்வி அவனை இதற்கு முன் பார்த்ததில்லை. அவளருகில் வந்து சில ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு போனான்.
அவன் அழகும், வசீகரமும் அவன் பேச்சும் அவளை வெகுவாய் கவர்ந்தது. தன் கனவு நாயகன் அவன் தான் என்பதை உணர்ந்தாள்.ஆனால் அவள் அப்படி உணரும் முன்பே அவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
அவனைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் ஒன்று தான். 'அவள் வீட்டில் நடந்த இறப்புக்காக அவன் வீட்டிற்கு வந்தான்'
செல்வி கிட்டத்தட்ட அவன் மீது பைத்தியமே ஆகிவிட்டாள். அவனை எப்படியும் பார்த்தே ஆகவேண்டும் என்று தீராத ஆசை கொண்டாள்
அடுத்த ஒரு வாரத்தில் செல்வி அவள் கூடப்பிறந்த அக்காவை கொன்றுவிட்டாள். அவள் வீட்டில் மீண்டும் ஒரு இறப்பு.
செல்வி எதற்காக தன் அக்காவை கொன்றாள் ?
பதில் :
இந்த இறப்பின் போதும் அவன் வருவான் என்று செல்வி நினைத்தாள். அதனாலேயே அவள் அக்காவை கொன்றாள். இப்படியாக நீங்களும் நினைத்திருந்தால் உங்களுக்கும் மனப்பிறழ்வு இருக்கக்கூடும். அமெரிக்காவில் இப்படி தான் நிறைய பேருக்கு மனப்பிறழ்வு இருப்பதை கண்டுப்பிடிப்பாங்களாம். வேறு ஏதேனும் முடிவை நினைத்திருந்தால் நீங்க ரொம்ப நல்லவுங்க :)
பி.கு : நீங்களும் செல்வி மாதிரியே சிந்திருச்சுருந்தா, தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். எதுக்கும் உங்க கிட்ட நாங்க உஷாராவே இருந்துக்குறோம்
(மடலில் வந்து ஒரு தகவலின் தமிழாக்கம்)
பதித்தது : ச.பிரேம்குமார் 20 கருத்துக்கள்
எழுத்து வகை: மொழிபெயர்ப்பு
27 November 2008
இரண்டு ஆண்டுகள், நூறு பதிவுகள் மற்றும் உயிரோசை கவிதை
உயிரோசை இதழில் வெளிவந்த என் கவிதையொன்று
அவளும் நாய்க்குட்டியும்
பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது
ஒரு நாய்க்குட்டி பொம்மை
கண்டதுமே அலறியவளை
புரியவைத்து சமாதானப்படுத்தியதும்
மெல்லப் புன்னகைக்கிறாள்
கூடவே சிரிக்கிறது நாய்க்குட்டியும்
பிடித்திழுத்து காதுகளைத் திருகி
மூக்கினைக் கடித்து
மேல் ஏறி அமர்ந்த போது
அது முழுதாய் வசமாகியிருந்தது
தெருவில் போகும் நாய் ஒன்றினை
வெறித்துப் பார்க்கத் தொடங்குகிறாள்
நன்றி : உயிரோசை
***
மொழியோடு பயணம் செய்ய ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வலைப்பதிவு ஆரம்பித்து சில காலம் பதிவுகள் எழுதிக்கொண்டு மட்டும் இருந்தேன். பின்பு மெல்ல அடுத்தவர்கள் பதிவை படிக்க ஆரம்பித்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொய்வடைந்தது பயணம் :)
இனி தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.இதோ, இது நூறாவது பதிவு
இந்த வலைப்பதிவும், பதிவுலகமும் என்னுள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. நிறைய படிக்க துவங்கியிருக்கிறேன், நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறேன், இன்னும் நிறைய 'நிறைய'
பதிவுலகத்தின் மூலமாக கிடைத்த அனைத்து நண்பர்களுக்கு இக்கணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதித்தது : ச.பிரேம்குமார் 33 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள், கவிதை, பதிவர் வட்டம்
24 November 2008
முச்சந்தியில் ஒரு சமூக அக்கறை
சமூகத்தின் மேல் அக்கறை கொள்வது ஒரு சாரார் தான். சில குறிப்பிட்ட பிரிவனர்களை சுட்டிக்காட்டி இவர்களுக்கு எல்லாம் சமூகத்தின் மேல் அக்கறையே கிடையாது என்று சொல்வதுண்டு. பிரிவினைவாதம் என்பது ஒரு கொடிய வியாதி தான்.
![]() | ![]() |
மேலே உள்ள படம் மடிப்பாக்கம் AXIS வங்கி அருகே இருக்கும் சந்திப்பில் ஒரு ஞாயிறு மாலையில் எடுக்கப்பட்டது. அந்த சந்திப்பில் போக்குவரத்து காவலர்கள் உண்டு எனினும், அவர்கள் எல்லா நாட்களிலும் எல்லாம் நேரங்களில் இருப்பது இல்லை
அப்படி காவலர் இல்லாத ஒரு நேரத்தில், நெரிசல் ஏற்படம் அபாயம் இருக்கும் ஒரு தருணத்தில் தாமாக முன்வந்து போக்குவரத்தை சீர்படுத்துகிறார் ஒரு இளம் தானி ஓட்டுனர். இந்த பதிவின் மூலம் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வோம். சமூக சிக்கல்கள் வருகையில் வேறு யாரேனும் வருவார்கள் என்று காத்திராமல் நாமே களத்தில் இறங்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு நல்ல முன்னுதாரணம்
அவசரத்தில் அவர் முகத்தை எடுக்க முடியவில்லை :(

நாளைய உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக கருதப்படுபவர்கள் மாணவர்கள். அவர்களில் ஒரு சிலர் செய்திருக்கும் செயலைத்தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள். பொதுச்சொத்தை மதிக்க அவர்கள் இன்னும் பழகிக்கொள்ள வேண்டும். பல சமயம் பெரியவர்களே இதை செய்வதில்லை.
பதித்தது : ச.பிரேம்குமார் 19 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
19 November 2008
மன்னராட்சி இன்னும் முடியவில்லை
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாசலில் பேருந்து நிலையத்தையே மறைத்துக் கொண்டு ஒரு பலகை இருக்கும், இப்பேருந்து நிலையத்தை திறந்து வைத்தது செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் என்ற அறிவிப்பை தாங்கியபடி. சில காலத்துக்கு முன்பு அந்த வளாகத்தின் மற்றொரு வாசலில் 'இந்த பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியது திரு. கருணாநிதி அவர்கள்' என்று ஒரு பலகையை வைத்தார்கள்.
அடிக்கல் நாட்டியவரும், திறந்து வைத்தவருமா இந்த வளாகம் கட்ட நிதி கொடுத்தார்கள். அரசு செலவில் தானே இவை செய்யப்பட்டது?
சென்ற மாதம் புதிப்பிக்கப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையையும், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலையையும் திறந்து வைத்தார் முதல்வர்.
ஆளுயர விளம்பர பதாகைகள், குழல்விளக்குகள், கட்சிக்கொடிகள், உதயசூரியன் சின்னம் பொறித்த சீரியல் செட் விளக்கு தோரணம் என்று அதகளப்படுத்துவிட்டார்கள் உடன்பிறப்புகள். மின் தட்டுப்பாடு சென்னையை முழுக்க ஆக்ரமித்திருக்க அன்று இரவு முழுதம் அந்த சாலை முழுவதும் குழல்விளக்குகள் எரிந்துக்கொண்டே இருந்தன. அந்த குழல்விளக்குக்களுக்கான மின்சாரம் எங்கிருந்து வந்தது? அந்த குழல்விளக்குகளால் என்ன பயன் என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
போக்குவரத்து மிகுந்த அந்த சாலையை செப்பனிட்டும், இணைப்பு சாலையை மேம்படுத்தியும் அரசு சிறப்பான ஒரு பணியை செய்திருக்கிறது.
ஆனால் அரசு சார்பாக நடந்த அந்த விழாவில், கட்சிக்கொடிகளுக்கும், கட்சி சின்னத்துக்கும் என்ன வேலை? இன்னும் புரியவில்லை
அதே போல் பல இடங்களில் பேருந்து நிறுத்தங்கள், உயர் கோபுர மின்விளக்குகள் மீது, 'இது இன்னாரது தொகுது மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்டது' என்று பலகைகள் இருக்கிறது. இதில் அன்னாரது பெயர் தேவையா?
மன்னராட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கிவிட்டதாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் எல்லாம் இன்னும் மன்னர் ஆட்சியில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அக்காலத்தில் மன்னர்கள் எழுப்பும் கோயில்களில் தங்கள் பெயரை பொறித்து வைத்துக் கொண்டது போல் தான் இருக்கிறது இவர்கள் நடவடிக்கை
பதித்தது : ச.பிரேம்குமார் 20 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
17 November 2008
வன்முறை எதற்கும் தீர்வாகாது
சட்டக்கல்லூரியில் நடந்த கொடுமையை பற்றி நிறைய எழுதிவிட்டார்கள். பிரச்சனை குறித்து இன்னும் நிறைய படித்தும் ஆராய்ந்தும் தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த சம்பவம் மட்டுமல்ல, அண்மையில் கேள்விப்பட்ட நிறைய சம்பவங்கள் எழுப்பும் ஒரு கேள்வி, "வன்முறை தான் எதற்கும் தீர்வு என்ற எண்ணம் ஏன் எல்லோருக்குள்ளும் வேரூண்ற தொடங்கிவிட்டது?"
எப்போதுமே இம்மாதிரியான செய்திகளால் பதைபதைக்கும் மனம், இம்முறை மிகுதியாகவே வேதனைப்பட்டது. காரணம் இம்முறை வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள். இந்த வயதிலேயே ஆயுதம் தூக்கத் தயங்காதவர்கள் வளர்ந்ததும் என்ன ஆவார்கள்?
இவர்களுக்கு ஆதரவாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் களம் இறங்கி கல்லூரி வளாகத்தில் கல் வீசியிருக்கிறார்கள்.
போராட்டம் என்றாலே பேருந்துகளை எரிப்பது, கட்டிடங்களை சேதப்படுத்துவது என்று ஏன் ஆகிவிட்டது? பொதுச்சொத்தை சேதப்படுத்தும் எந்த ஒரு போராட்டமும் மக்களிடத்தில் வெறுப்பை சம்பாதித்துக் கொடுக்கும் என்று இவர்கள் நினைக்க தவறுவது ஏன்? அறப்போராட்டங்கள் பற்றி யாரும் சிந்திக்க மறுப்பது ஏன்?
ஒரு விதத்தில் இந்த தவறுகளுக்கு எல்லாம் பெரியவர்கள் தான் காரணமோ என்று தோன்றுகிறது. போராட்டங்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்தை தான் இந்த இளைஞர்களும் பின்பற்றுகிறார்கள். ஊடகங்களும் இப்போதெல்லாம் வன்முறைக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இன்னும் சில காலத்தில் அமைதி, சகிப்புத்தன்மை போன்ற வார்த்தைகளையே மக்கள் மறந்து விடுவார்கள் போலும். அடுத்த தலைமுறைக்கு இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது
பிற்சேர்க்கை 1 : நிகழ்விடத்தில் கை கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்த காவல்துறை இப்போது சட்டக்கல்லூரி மாணவர்களை மும்முரமாய் கைது செய்வது வேதனை :(
பிற்சேர்க்கை 2 : இலங்கையில் நடக்கும் போருக்கு எதிராக நேற்று (17.11.2008) டைடல் பார்க் முன்பு மனித சங்கிலியாக இணைந்து குரல் கொடுத்தனர் ஐ.டி. துறையினர். 'போரை நிறுத்து' என்ற வாசகம் தாங்கிய சட்டைகள் அணிந்து போருக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இந்த நிகழ்வை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
பதித்தது : ச.பிரேம்குமார் 4 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
7 November 2008
'குருவி'யை சுடும் 'ஏகன்'
மடலில் வந்த புகைப்படம். அஜீத் ரசிகர்கள் 'ஏகன்' படத்திற்காக தயாரித்திருக்கும் பதாகை
SPARROW & ARROW BECOMES ZERO TO OUR HERO.
எதுகை மோனை எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா 'வில்'லுக்கு ஆங்கிலத்துல 'BOW'. 'ARROW'ன்னா அம்பு :)
THALA IS NOT DIRECTOR SON HE IS DIRECT SUN
அட அட! என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்?
THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS
சும்மா நச்சுன்னு பாயிண்ட புடுச்சிட்டாங்கப்பா :)
இந்த பதாகை எழுதியவர்(கள்) கற்பனையை, INNOVATIVE THINKINGஐ ரசித்தேன். ஆனால் அதே சமயத்தில் இது போன்ற சிந்தனைகளை இவர்கள் தங்களின் 'தல'யின் பதாகையோடு நிறுத்தி விடுவார்களோ என்ற எண்ணமும் மற்றொரு புறம் எழவே செய்கிறது.
யாராவது இந்த ரசிகர் மன்றங்களை ஒழித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்
பதித்தது : ச.பிரேம்குமார் 40 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
6 November 2008
திரைப்படம் - தொடர்பதிவு
நான் வலைப்பூவுலகம் பக்கம் வந்து கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது என்றாலும் மறக்காமல் நினைவில் வைத்து அழைத்த சந்தனமுல்லை, கார்த்திக் & சரவணகுமாருக்கு நன்றிகள்
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
திரையரங்கில் பார்த்ததில் நினைவிருக்கும் முதல் படம் என்றால் 'விக்ரம்' என்று சொல்லலாம். அப்போது வயது 6. உணர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தது எல்லாம் ரொம்ப வருடங்கள் கழித்து தான்
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அதென்னப்பா கடைசியா? சமீபத்தில் என்று தானே இருக்க வேண்டும். நிறைய இடைவெளிக்குப் பிறகு வெள்ளியன்று 'ஏகன்' திரைப்படம் பார்த்தேன். ஓரளவு மொக்கை என்றாலும் சலிப்பு தட்டவும் இல்லை
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அரங்கிலன்றி தொலைக்காட்சியில் படம் பார்ப்பதே இல்லை. விளம்பரங்களுக்கு இடையே எப்போதேனும் காட்டப்படும் படம் பெரும் சலிப்பை தரும். ஏதேதோ காரணங்களால் அரங்கில் பார்க்க முடியாமல் போன 'சரோஜா' படத்தை குறுந்தகடு உதவியுடன் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். கதை கருத்து என்று ஒன்று இல்லாவிட்டாலும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் அசத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு.
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
கல்லூரி காலத்தில் பார்த்த "அலைபாயுதே". என்ன காரணம் என்று சொல்ல தேவையில்லை ;)
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தாக்கும் அளவுக்கு எதுவும் நடந்ததாய் நினைவில்லை
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ம்ஹீம்.... இதுக்கெல்லாம் பதில் சொல்ற அளவுக்கு நமக்கு அறிவு பத்தாதுங்க :)
6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வார இதழ்கள், வலைதளங்கள் எதை புரட்டினாலும் திரைப்படங்கள் குறித்து ஏதேனும் ஒன்று இருந்துவிடுகிறதே. அதனால் வாசிக்க நேர்ந்துவிடுகிறது. ம்ம்ம், வாசிப்பை ஒழுங்குப்படுத்த வேண்டும்
7.தமிழ் சினிமா இசை?
ரகுமான் இசையில் மூழ்கித்தான் கழிந்தது பதின்ம காலம். இப்போதெல்லாம் எப்போதோ ஒரு முறை தான் இசையமைக்கிறார். தமிழ் திரையிசையை இப்போது நிறைய குத்துப்பாட்டுகளும் அதிரடி ரீமிக்ஸ்களும் தான் ஆக்ரமித்து உள்ளன. சீக்கிரமே பழையபடி நிறைய மெல்லிசை பாடல்கள் வரவேண்டும்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நான் பார்த்த வேற்று மொழி படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மிகவும் பாதித்தவை DILWALE DULHANIA LE JAYENGE, KUCH KUCH HOTA HAI, JURASIC PARK, HONEY, I SHRUNK THE KIDS
9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சத்தியமா இல்லை :)
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் பல சமயம் அவர்கள் செய்துக்கொள்ளும் compromise கள் தான் அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. முழுச் சுதந்திரத்துடன் இயங்கும் படைப்பாளிகள் கிடைத்தால் தமிழ்சினிமாவின் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்
நான் நிம்மதியாய் இருப்பேன். இப்போதே எனக்கும் திரைப்படங்களுக்குமான தூரம் அதிகரித்துவிட்டது. தொலைக்காட்சி தான் கொஞ்சம் நேரத்தை விழுங்குகிறது.
தமிழர்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. வேறு நல்ல விசயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் திரைப்படங்களும் ஒரு நல்ல ஊடகமாக இருந்தன. பல அரசியல் சம்பவங்களை, நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டின. வெளிநாட்டினையெல்லாம் சுத்திக் காட்டினார்கள்.
இப்போது இவற்றையெல்லாம் சொல்ல தொலைக்காட்சி வந்துவிட்டது. மேலும் திரைப்படங்களும் இப்போது வெறும் பொழுதுப்போக்காக மட்டுமே இருக்கிறது. கலாச்சாரத்தையும் இவர்கள் சீரழத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். (ஏகன் படத்தில் கல்லூரி விரிவுரையாளராக வரும் நயன் தாராவின் உடையை பார்த்தாலே புரியும் இவர்கள் ரசனை)
தமிழ்சினிமா ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டால் கூட நன்றாகத்தான் இருக்கும்.
***
எனக்கு அழைப்பு வந்து வெகு நாட்கள் ஆயிற்று. ஆகையால் அதற்குள் எல்லோரும் எழுதி முடித்திருப்பார்கள் என்பதால் யாரையும் அழைக்கவில்லை :)
பி.கு : தமிழ்ச்சினிமா என்று எழுதியிருப்பதை பார்த்துவிட்டு வீட்டில் சொன்னது. அதென்ன தமிழ்ச்சினிமா ? தமிழ் திரைப்படங்கள் என்று எழுதலாமே.... அப்புறம் சினிமா என்றே எழுதினாலும் அதில் என்ன ஒற்று ? தமிழ் சினிமா என்று தானே இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்துட்டுப் போயிட்டாங்க :)
பதித்தது : ச.பிரேம்குமார் 13 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
5 November 2008
சோதனைப் பதிவு
திரைப்படம் குறித்த தொடர்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை. ஆனால் சோதனைப் பதிவு போட்டால் சேர்க்க முடிகிறது.
என்ன கொடுமை பிரேம்குமார் இது?
பதித்தது : ச.பிரேம்குமார் 1 கருத்துக்கள்
15 September 2008
திண்ணை நினைவுகள்
திண்ணையை பற்றி என்னை எழுத அழைத்த சரவணகுமாருக்கு நன்றிகள் பல.. [இப்படித்தான் முன்னுரை எழுதனும் அப்படின்னு சரவணகுமார் சொல்லியிருக்காரு :) ]
நகரத்தில் வளர்ந்த எனக்கும் திண்ணைக்கும் அவ்வளவாக சம்பந்தமில்லை என்றாலும், என் வாழ்விலும் மறக்க முடியாத சில திண்ணைகள் இருக்கவே செய்கின்றன
** திருமோகூர் திண்ணை **திருமோகூரில் உள்ள வீடு அம்மாச்சியின் அப்பா கட்டியது. திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு அருகில் அமைந்த வீடு. அக்காலத்தில் அந்த வீடு மட்டும் தான் கல்வீடாக இருந்ததாம். வீட்டு வாயில் வளைவு மேல் பாரத அன்னையின் சிலையும் காந்தியின் சிலையும் இருக்கும். அதனால் இன்றும் திருமோகூரில் அந்த வீட்டை எல்லோருக்கும் அடையாளம் தெரியும்.
பள்ளி விடுமுறைகளில் திருமோகூருக்கு சென்று மிக சொற்பமான நாட்கள் தான் எனினும், அந்த திண்ணையில் விளையாடிய நாட்கள் நன்றாக நினைவிருக்கிறது.
(போன வாரம் மதுரை போக நேர்ந்தபோது எடுத்த புகைப்படம். திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பது அப்பா)
** மதுரை திண்ணை** மதுரை கோரிப்பாளையத்தில் உள்ளது பெரிய அம்மாச்சியின் வீடு. நான் பிறந்தது மதுரையில் தான் என்பதால் என் முதல் சில மாதங்களை நான் அந்த வீட்டில் தான் கழித்திருக்கிறேன். பின் சில கோடை விடுமுறைகளில், எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டையடிக்க, சித்திரை திருவிழாவுக்கு என அடிக்கடி மதுரை சென்றதுண்டு. பெரியவர்கள் எல்லாம் உள்ளறைகளில் தூங்கச் சென்றுவிட அனேகமாய் பிள்ளைகள் அனைவரும் ஓரிரு பெரியவர்கள் கண்காணிப்பில் திண்ணையில் தான் படுத்து உறங்குவோம். நாள் முழுவதும் சாப்பாடு, விளையாட்டு என அங்கே தான் பொழுது கழியும்.
** தேவகோட்டை திண்ணை **
தேவகோட்டை வடக்கு மாசி வீதியில் இருப்பது தாத்தாவின் அப்பா வீடு. அங்கே இருக்கும் திண்ணை தான் மேலே குறிப்பிட்ட திண்ணைகளை விட மிக நீளமானது. வீட்டிற்கு முன் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு ஆடி மாதம் திருவிழா நடைபெறும். அப்போது நடைபெறும் கூத்து நிகழ்ச்சிகளை விடிய விடிய பார்த்ததுண்டு. தூக்கம் வரும் நேரம் திண்ணையில் படுத்துக்கொண்டு நாடகத்தை பார்த்துக்கொண்டே உறங்கிப்போனதுண்டு.
அந்த திண்ணையில் இன்னொரு விசேசமும் உண்டு. இரண்டு திண்ணைக்கும் நடுவே வீட்டுக்குள் செல்ல 3 படிக்கட்டுகள். சரியாக திண்ணைக்கு வெளியே வாசலுக்கருகில் இரண்டு யானையின் உருவங்கள் இருக்கும். செம்மண் நிறத்தில் அழகாய் பளபளப்புடன் இருக்கும். சின்ன வயதில் அதன் துதிக்கையில் சறுக்கி விளையாடியிருக்கிறோம். இப்போது அந்த யானைகள் பார்க்கையில் அவை இடுப்பளவுக்கு கூட இல்லை. (தேவகோட்டைக்கு சென்று திண்ணையின் படத்தை எடுக்கும் வாய்ப்பு கிட்டவில்லை)
தொடர்பதிவுக்கு இரண்டு பேரை அழைக்கனுமாமே...
முதல் நபர்.. தம்பி கார்த்திக்
இரண்டாவதாக தோழி சந்தனமுல்லை
சரவணா, சரியா எழுதிட்டேனாப்பா? :)
பதித்தது : ச.பிரேம்குமார் 20 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
4 September 2008
பதிவர் ப்ரியனுக்கு திருமண வாழ்த்துக்கள்
காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!
பதிவுலக நண்பர் ப்ரியனுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது. எப்படியோ ஆர்குட்டில் உழன்று திரிந்துக்கொண்டிருந்த போது, ஒரு தோழி மூலமாக அறிமுகமானார் ப்ரியன். அவர் மூலமாக தான் பின்பு தமிழ் கூகுள் குழுமங்கள், வலைப்பதிவு, தமிழ்மணம் என்று என் வட்டம் விரிந்தது.
நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி
ப்ரியன் திருமணம் காதல் திருமணம் தான். அவர் காதல் கொண்ட கதையை அவர் சொற்களிலேயே படிக்க இங்கே சொடுக்கவும்
தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!
ப்ரியனின் துணைவியார் தான் அவரின் முதல் வாசகி. அவரின் பார்வைக்கு அனுப்பப்பட்ட பின்பே ப்ரியனின் கவிதைகள் வலையேற்றப்படுகின்றன. ஒருமுறை ப்ரியனின் கவிதை ஏட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ப்ரியனின் கவிதைகள் ஒருபுறம் இருக்க, பக்கத்திலேயே அவர் இல்லாளின் பின்னூட்டங்கள் சேர்ந்தே இருந்தது. ப்ரியனுக்கு சமமாய் அவரின் துணைவியாரும் இலக்கியத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். ஒரு புத்தகம் கிடைத்துவிட்டால் போதும், அவருக்கு சாப்பாடு, தூக்கம் ஏன் நான் கூட தேவைப்படுவதில்லை என்று ப்ரியன் சொல்வதுண்டு
கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!
இவர்கள் திருமணம் இனிதே நடைபெறவும், அவர்கள் வாழ்வு சிறப்புறவும் வாழ்த்துக்கள். விக்கி, மது... காதலித்துக் கொண்டே இருங்கள்!!!
நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!
திருமண அழைப்பிதழ்
*இந்த பதிவில் இருக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரர்கள் ப்ரியன் & மது :)
பதித்தது : ச.பிரேம்குமார் 6 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
29 August 2008
காதல் எனப்படுவது யாதெனில்
காதல் எனப்படுவது யாதெனில் என்று எழுத அழைத்த தம்பி கார்த்திக்கிற்கு நன்றி
காதல் வீணை;
மீட்டும் கைகளே நிர்ணயிக்கும்
இசையையும்
சப்தங்களையும்!
காதல் நெடுங்கதை;
தொடங்குதல் எளிது
தோய்வில்லாமல் தொடரத்தான்
திணற வேண்டியிருக்கிறது!
காதல் ஞானம்;
பகிர பகிர
பெருகிக்கொண்டே இருக்கிறது
இருப்பு!
வாழ்க்கை பூ,
காதல் தேன்;
காகிதப்பூக்களுடன் சொந்தம்
கொண்டாடுவதில்லை
வண்டுகள்!
காதல் சிகரம்;
முரட்டுப் பாதையின்
முடிவில்
விரிந்திருக்கும் எல்லைகளற்ற அழகு
விதிமுறைகள்:
1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.
4. மறக்காமல் விதிமுறைகளை இடவும். விதிமுறைகள் மாற்றக் கூடாது
காதல் எனப்படுவது யாதெனில் என்பதை அடுத்து சரவணக்குமார்
விளக்குவார்
பதித்தது : ச.பிரேம்குமார் 36 கருத்துக்கள்
எழுத்து வகை: கவிதை, காதல், பதிவர் வட்டம்
11 August 2008
போட்டி மனப்பான்மையும் ஒரு தற்கொலையும்
IIT alumnus jumps to death from office
8 Aug 2008, 0454 hrs IST,TNN
PUNE: Unable to cope with the work pressure in the software world, an IIT alumnus committed suicide on Wednesday night by jumping from the terrace of the seven-floor building where he was working.
Sandeep Appasaheb Shelke (25) of Kakade city in Karvenagar was a software professional at Persistent Systems. According to Prakash Limaye, security officer and advisor to the company, Shelke jumped from the company terrace around 9.45 pm on Wednesday. Shelke was rushed to Sassoon Hospital, where he was declared dead around 11.00 pm.
Shelke’s suicide note, recovered by the Deccan police, mentions that no one is responsible for his act. “I am unable to do my work well and very depressed because of it. I tried my best to meet the work expectations but still unable to do it. I feel sorry for my loved ones but it’s just become unavoidable for me now,’’ the note says.
Before taking the extreme step, Shelke had SMSed his brother Yuvraj about his decision to end life. Yuvraj tried to call Shelke to stop him. His also went to the Karvenagar police chowki to inform the police.
However, Shelke had already killed himself. The family hails from Vasunde village in Ahmednagar district. The brothers (Sandepp and Yuvraj) stayed with their mother. Shelke’s brother also works with a software firm. His father is the sarpanch of Vasunde village. The family was looking for a bride for Shelke.
Shelke’s cousin Sujit Zhavare-Patil said he was quite emotional and was always engrossed in studies.
மிகவும் வருந்தத்தக்க இச்செய்தியை சமீபத்தில் பண்புடனில் நண்பர் அகமது சுபைர் இட்ட போது கவனித்தேன். சமீப காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவே தோன்றுகிறது. என்னவோ இது ஐ.டி. துறையினால வருவது தான் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது.
அண்ணன் அறிவுமதியிடம் ஒரு சமயம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும்போது கூட அவர் இது போன்று சம்பவத்தை குறிப்பிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையால் தான் இது நிகழ்வது போலே கூறினார்
ஆனால் உண்மை.....???
சமீப காலங்களாக தொலைக்காட்சியில் வரும் நேரலை போட்டி நிகழ்ச்சிகளை கண்டாலே பதில் கிடைத்துவிடும். இக்கால குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தோல்வி என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. வட இந்தியாவில் ஒரு இளம்பெண் ஒரு தொலைக்காட்சி போட்டியில் கலந்துக்கொண்டு தோல்வி கண்டதால் அவருக்கு நேர்ந்த பாதிப்புகளை நாம் அறிவுவோம். எல்லாரும் "தான்" தான் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். படிப்பிலோ, போட்டிகளிலோ, வேலையிலோ தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் துவண்டு போகிறார்கள்.
"போட்டி மனப்பான்மை" என்பது இக்காலக்கட்டத்திற்கு தேவையான ஒன்றுதான். எல்லோருமே திறமைசாலிகளாக இருப்பதால் நம் இருப்பை நிலைநாட்டிக்கொள்வது இன்றியமையாத ஒன்றாக தான் இருக்கிறது. ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு நாம் 'வெற்றி'யை நோக்கி பயணப்படுகிறோமோ அதே அளவு தோல்வியை ஒத்துக்கொள்ளவும், அடுத்தவர் வெற்றியை மகிழ்ச்சியோடு வரவேற்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு போட்டி மனப்பான்மையை கற்றுக் கொடுக்கும் நாம் தானே தோல்வியை ஒப்புக்கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் வர முடியவில்லையென்றால் படிப்பதே வீண் என்பது போன்ற உணர்வுடன் பிள்ளைகளை வளர்த்துவிட்டால், பின்னால் பள்ளியை விட பன்மடங்கு பெரிதான இந்த உலகில் ஏதோ ஒரு இடத்தில் தோல்வியை தழுவிவிட்டால், வாழ்வதே வீண் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்
"வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு"
பதித்தது : ச.பிரேம்குமார் 19 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
31 July 2008
மடிப்பாக்கம் விட்டு வைக்குமா வைக்காதா?
சென்னையில் வாடகைக்கு வீடு தேடி நொந்து நூலாகும் அனேகம் பேரில் நானும் ஒருவன். இந்த வருடத்தில் இது இரண்டாவது முறை. தினமும் நூற்றுக்கணக்கானோர் குடிபெயரும் இந்த சென்னையில் வாடகைக்கு வீடு தேடுவது மிக மிக கடினமான ஒரு வேலையாக தான் இருக்கிறது.
இப்போது இருக்கும் வீட்டை விற்றுவிட்டு இன்னும் பெரிதானதொரு வீட்டை வாங்க போகிறாராம் வீட்டின் உரிமையாளர். ம்ம்ம், ஆறு மாசத்தில உங்களால வேறு வீடு வாங்க முடிகிறது நல்ல விசயம் தான். ஆனால் ஆப்பு என்னமோ எங்களுக்கு தான்.
முன்பு போல் இப்போது எங்கும் 'வீடு வாடகைக்கு விடப்படும்' பலகையை பார்க்க முடிவதில்லை. எல்லா இடங்களில் இடைத்தரகர்களை தான் நம்ப வேண்டியிருக்கிறது. ஏதாவது புண்ணியவான்கள் வலைதளங்களில் விளம்பரம் செய்திருந்தாலும் கொஞ்ச நேரத்திலேயே தொலைபேசினாலும் 'முடிந்துவிட்டது' என்று தான் பதில் வருகிறது
வலைப்பூவில் எழுதி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. உருப்படியா சீக்கிரம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனா இப்போது இந்த புலம்பலை இங்கே இட வேண்டிய நிலை. வேற எங்கே போய் புலம்புறது????
மடிப்பாக்கத்தோடு இப்போது தான் கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மடிப்பாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நேசிக்க ஆரம்பித்திருக்கும் இந்த தருணத்தில் இப்படி ஒரு செய்தி. மடிப்பாக்கத்துடனான உறவு தக்க வைக்கப்படுமா இல்லை முறியுமா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்...
பதித்தது : ச.பிரேம்குமார் 18 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
8 July 2008
மாமன் மகள் பதித்துப்போன நினைவுகள்
வீட்டில் ஒரு நற்காரியம் என்பதால் நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் கூடியிருந்தனர். நான், எனது பெரியம்மா மக்கள் என்று பிள்ளைகள் கூட்டமாய் சுற்றிக்கொண்டிருந்த காலம் போய் இப்போது அக்கா குழந்தைகள், தங்கையின் மகள், மாமன் பிள்ளைகள் என்றொரு அழகு மழலைப் பட்டாளம் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தது.
***
மாமா பெண் இப்போது தான் மழலையர் வகுப்பு சேர்ந்திருக்கிறாள். பெண் பிள்ளைகளுக்கு எப்படித்தான் அந்த அழகுணர்ச்சி வருமோ தெரியவில்லை, இப்போதிலிருந்தே ஆடைகள், நகைகள் என்றால் கொள்ளை பிரியம் அவளுக்கு. அது எந்த அளவுக்கு போயிருக்குன்னு பாருங்க
அத்தை : அபி, இன்றைக்கு பள்ளியில என்ன சொல்லிக்கொடுத்தாங்க? டீச்சர் நல்லா தராங்களா?
அபி : போம்மா, எங்க டீச்சருக்கு ஒன்னுமே தெரியல. இன்றைக்கு ஆத்திசூடி சொல்லிக்கொடுத்தாங்க... அம்மா அது 'நெத்திசூடி' தானே. டீச்சர் ஏன் 'ஆத்திசூடி'ன்னு சொல்றாங்க?
ஆத்தா, நல்ல வேளை அவ்வையாரால இதெல்லாம் கேக்க முடியாது
***
அத்தை : சரி அந்த ஆத்திசூடிய கொஞ்சம் சொல்லு
அபி : அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்......... தூக்கமது கைவிடேல்
அத்தை : வெளங்கிரும் !!
***
அபி திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டாள். பதறிப்போய் என்னவென்று கேட்டால், சட்டையில் தண்ணீர் சிந்தி ஈரமாகிவிட்டதாம். சரிம்மா இதை கழட்டிவிட்டு வேறு உடை போட்டக்கலாம் என்ற போது கண்ணீர் மறைந்து பெருஞ்சிரிப்பொன்று ஒட்டிக்கொண்டது
மாமாவோ எந்த சலனமுமில்லாமல் வேறு உடையை கொண்டு வந்து கொடுத்துப் போட்டுக்கொள்ள சொன்னார்கள். நான் ஏதோ ஒன்று விளங்காதவனாய் மாமாவை பார்த்தபோது அவர்கள் சொன்னது,
"மொத்தம் நாலு உடை கொண்டு வந்திருந்தோம். இன்னும் ஒன்னு போடாம் இருந்தது. இப்போது கிளம்பு நேரம் வந்திருச்சா. அதான் இந்த நாடகம்"
ஆகா, ஒரு மார்க்கமாதான்யா இருக்காங்க
***
என் தங்கையின் மகன் பிரணவுக்கு ஒரு வயதாகி முன்று மாதம் தான் ஆகிறது. ஆனால் அவன் செயல்கள் எல்லாமே வியப்பாய் இருக்கிறது. என் தங்கை அவனை சரியாக வளர்க்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்
காகம், நாய், சிங்கம், குதிரை எல்லாம் எவ்வாறு ஒலி எழுப்பும் என சொல்ல தெரிகிறது. வீட்டிலுள்ள பொருட்களின் பெயர் சொன்னால் அவற்றை சுட்டிக்காட்ட தெரிகிறது. புத்தகங்களிலும் அவற்றை சரியாக அடையாளம் காட்டுகிறான்.உறவுகளையெல்லாம் நன்றாக சொல்ல தெரிகிறது. அவனைவிட கொஞ்சம் வளர்ந்த வேறு சில குழந்தைகள் ஆர்வமாக வந்து 'நான் யார்ன்னு சொல்லு' என்ற போதும் குழம்பாமல் 'அண்ணா, அக்கா' என்று சொல்லி சமாளித்தான். தாங்களே குழந்தைகள் தான் என்பதை மறந்து அவன் விளையாட்டையும் அவன் மழலையையும் கொண்டாடிக்கொண்டிருந்தன மழலைப் பட்டாளம்.
***
அவர்கள் வீட்டினருகே சாலை அமைத்த போது கொண்டுவரப்பட்ட 'ரோட் ரோலர்' அவனுக்கு பெரிய வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது பெரிதாய் இருக்கிறது என்று குறிப்பதற்கு இரண்டு பிஞ்சு கைகளையும் தலைக்குப்பின் உயர்த்தி காட்ட கற்றுக்கொண்டிருக்கிறான்
புதுவையின் கடற்கரை என் தங்கைக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறு பிள்ளைகளாய் நாங்கள் விளையாடித் திரிந்த அதே கடற்கரை சாலையில் ப்ரணவையும் கூட்டிக்கொண்டு நடந்தார்கள். என் தங்கை இன்னும் ரசிக்கும் அந்த கடற்கரையை அவனும் கண்டு ஆர்ப்பரித்திருக்கிறான். வீட்டுக்கு வந்தவுடன் என்னடா செல்லம் பார்த்தே என்று கேட்டால் சிரிக்க மட்டுமே தெரிந்தது. இருப்பினும் கடலில் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்று கேட்டால் இரு கைகளையும் பின்னோக்கி உயர்த்தி காட்டியபோது அவன் கண்களிலும் அத்தனை வியப்பும் ஆச்சரியமும் அப்போதும் இருந்தது
வெளியே போகும் போது எனக்கு உன்னோட சுரிதார் ஒன்றை கொடு என்று என் இளைய தங்கையிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் தங்கை. அய்யோ அக்கா, உனக்கு பெரிய உடை தானே பொருந்தும் என்று கேலி செய்துக் கொண்டிருந்தார்கள் தங்கைகள். அப்போது ப்ரணவை அழைத்து, 'அம்மாக்கு எவ்வளவு பெரிய உடை வேண்டும் தம்பி' என்று கேட்ட போது எப்போதும் இல்லாத வண்ணம், கைகளை மிக அலகமாக தலைக்கு மேல் விரித்து காட்டினான். சிரிப்பலைகள் நிற்க வெகு நேரம் ஆனது
பதித்தது : ச.பிரேம்குமார் 17 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
25 June 2008
என்ன தான்பா உங்க பிரச்சனை?
எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் மின் தொடர்வண்டிக்கான பயணச்சீட்டு எடுக்க நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டிருந்தேன். வரிசையில் எனக்கு கொஞ்சம் முன்னே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வந்த ஒரு இளைஞன் அவர் அருகே வந்து நின்றான். இந்த பெண் மெதுவாக அவரிடம் 'வரிசையில் போய் நில்லுங்க' என்றார். நீங்க இங்க ஏன் நிக்கிறீங்க, பெண்கள் வரிசையில் போய் நில்லுங்க என்றார் அவர். 'பெண்கள் வரிசையெல்லாம் எதுவும் இல்லை. நீங்க போய் முதல்ல வரிசையில் நில்லுங்க' என்று அந்த பெண் கூற அந்த தன்மானச்சிங்கம் கூறியது 'நான் பயணச்சீட்டு வாங்கமலே போயிக்கிறேன்'
என்ன தான்பா உங்க பிரச்சனை?
***
கோயம்பேடு பேருந்து நிலையித்திலிருந்து D70 வெளியே வந்து கொண்டிருந்தது. உள்ளே உள்ள நிறுத்தத்தில் ஏறினால் அது எந்த வழியாக செல்கிறது என்று கேட்டுவிட்டு ஏறலாம். வெளியே வரும்போது ஏறி முற்பட்டால் அது எங்கே செல்கிறது என்று யூகிக்க முடியாது. பேருந்தில் உள்ள யாரையேனும் கேட்டால் தான் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால் ரொம்ப அவசரமாக ஒரு நபர் வளாகத்தின் வெளியே பேருந்துக்குள் அவசரமாக ஏறினார். எங்கே செல்லவேண்டும் என்று நடத்துனர் கேட்ட கேள்விக்கு அவர் இருக்கையை கண்டுப்பிடித்து அமர்ந்துவிட்டு அப்புறம் மெதுவாக பதில் சொன்னார். "அம்பத்தூருக்கு ஒரு சீட்டு". பேருந்தோ வேளச்சேரிக்கு போய் கொண்டிருந்தது. விசயத்தை அவரிடம் விளக்கியதும் கோபமாக அவர் சொன்னார், 'அப்புறம் எதுக்கு போர்டுல அம்பத்தூர்'னு எழுதி வச்சிருக்கீங்க, முதல்ல அதை கழட்டி எறியுங்க'
என்ன தான்பா உங்க பிரச்சனை?
***
நேற்று விஜய் தொலைக்காட்சியில் 'காதலிக்க நேரமில்லை' தொடரின் ஒரு பகுதியை பார்க்க நேர்ந்தது. நாயகி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேருவதாக காட்டினார்கள். பார்த்த கொஞ்ச நேரத்திலேயே அந்த நிறுவனத்தில் இருக்கும் ஆண் பெண்களின் தோள் மேல் கை போட்டு பேசுவதாகவும், பெண் கேவலமாக ஒரு நடையில் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுவதாகவும் காட்டினார்கள்.
மேலும் அமெரிக்க மோகம் பிடித்த ஒரு ஆள், ட்ரீட் போகலாம் என்று முடிவெடுக்கும் ஒரு கும்பல் என்று நீண்டு கொண்டே போனது காட்சியமைப்புகள். முதல் இரண்டு பாகங்களை வைத்து கொண்டு முடிவு எடுப்பது சரியல்லை தான், இருப்பினும் ஒரு மென்பொருள் நிறுவன சூழலை காட்ட வேண்டும் என்றால் அவர்களுக்கு இந்த காட்சிகளை எடுக்க ஏன் தோன்றியது?
என்ன தான்பா உங்க பிரச்சனை?
பதித்தது : ச.பிரேம்குமார் 22 கருத்துக்கள்
எழுத்து வகை: என்ன தான்பா உங்க பிரச்சனை?
28 April 2008
சின்ன வயதில் பாடிய பாடல்கள். அப்படின்னா????
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னைப் போல நல்லார்
ஊரில் யாரு உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இனி இல்லை
கொஞ்சம் நல்லா நினைவில் நிற்கிற பாட்டு இதுதான். ஆனா எழுத உட்கார்ந்த போது தான் அதுவும் அரைகுறையாய் தான் நினைவிருக்குன்னு தெரிஞ்சுது.
ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை
குட்டு யானைக்கு
கொம்பு முளைச்சதாம்
பட்டணம் எல்லாம்
பறந்தோடி போச்சாம்
மதுரையில் பிறந்த எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ;-)
(ஆனா ஆனை பறக்குமா என்று ரூம் போட்டு தான் யோசிக்கனும்)
தேன்மொழி நல்ல பெண்
காலையில் எழுவாள்
அம்மாவுக்கு உதவுவாள்
பாடம் படிப்பாள்
பள்ளிக்கூடம் போவாள்
இது பாட்டு வகையில சேருமான்னு தெரியல। ஆனா என் தம்பி சின்ன வகுப்புல படிச்சது இது। அவன் ராகத்தோட இத பாடுவான். அதுவும் 'நல்ல' என்ற வார்த்தை வராமல், 'தேன்மொழி லல்ல பெண்' என்று தான் சொல்வான். அதனாலேயே என்னவோ இந்த பாட்டு (?!!) நன்றாக நினைவில் உள்ளது
பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்கு கிடைத்த பொம்மை போல்
ஏதும் இல்லை உலகிலே
ஆட்டத்துக்கு அழைத்த தங்கை எழில்பாரதியே இந்தப் பாடலையும் கொடுத்து உதவினார்। பார்த்தவுடன் தான் ஆகா, இந்த பாட்டையும் நாம் பாடியிருக்கிறோமே என்று நினைத்துக்கொண்டேன்
யாரையாவது 3 பேர மாட்டி விடனுமாமே.... அவுங்க யாருன்னா....
கௌசல்யா
செந்தில்
நந்தா
பதித்தது : ச.பிரேம்குமார் 7 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
24 April 2008
எந்த திரையரங்கில் என்ன படம் என சொல்லுது கூகுள்
கூகுளில் மற்றொரு சேவை கூகுள் மூவீஸ். உங்கள் நகரத்தை குறிப்பிட்டால் உங்கள் ஊரில் எந்தெந்த திரையரங்குளில் என்னென்ன திரைப்படங்கள் ஓடுது என்று சொல்கிறது கூகுள் :)
http://www.google.co.in/movies
புதுவையில் ஓடும் திரைப்படங்கள் பத்தி கூகுள் என்ன சொல்லுச்சுன்னா....
பதித்தது : ச.பிரேம்குமார் 1 கருத்துக்கள்
எழுத்து வகை: செய்தி
8 April 2008
தேடல்
தேடித் தவங்கிடக்கையில் சிக்காது, ஏதோ ஒரு மௌன கணத்தில் வந்தடைந்து வியப்பூட்டும் கவிதையும் காதலும்! | ![]() |
*** இந்தக் கவிதை 'நாம்' காலாண்டிழதின் முதல் பதிப்பில் வெளிவந்துள்ளது
பதித்தது : ச.பிரேம்குமார் 18 கருத்துக்கள்
3 April 2008
வந்தாரை வாழவைப்பது கர்நாடகமா? சிரிப்புதான்யா வருது...
மீண்டும் வெடிக்கிறது தமிழக கர்நாடகா பிரச்சனை (எப்போது ஓய்தது என்கிறீர்களா? அதுவும் சரிதான்)
இரண்டு பக்க அரசியல்வாதிகளும் எதற்கும் தீர்வு காணாமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்த இரு காட்சிகள் சிரிப்பையும் பெரும் எரிச்சலையும் ஒருசேர வரவைத்தன
காட்சி 1:
கர்நாடக அரசியல்வாதி ஒருவர் கூறுகிறார் : 'மகாராஷ்டிராவில் நடப்பது போலவே இங்கும் செய்ய வேண்டும். வந்தாரை வாழ வைப்பவர்களாக இனி கர்நாடகம் இருக்கக்கூடாது'
என்ன பேசுகிறார் என்பதை புரிந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அய்யா, நீங்கள் அரசியல்வாதி. தொகுதிக்கு சென்று எப்போதாவது பார்ப்பீர்கள். மேடையோ பேட்டியோ கிடைத்தால் பேசுவீர்கள். சட்டசபைக்கு முடிந்தால் செல்வீர்கள் (அங்க ஒன்னும் கிழிக்க மாட்டீர்கள், வேட்டி சட்டையை தவிர). அத்தோடு முடிந்தது உங்கள் உலகம். உங்களால் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியும். ஆனால் மற்ற தொழில் செய்பவர்களுக்கும் அது பொருந்துமா? எல்லோரும் அவரவர் ஊரிலேயே இருந்துக்கொண்டு தான் பிழைக்க வேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளைதனமா இல்லை?
பெங்களூர் இப்போது வாழ்வதே தகவல் தொழில்நுட்பத்துறையால் தான். அங்கே இருக்கும் ஏதேனும் அலுவலகத்துள் சென்று பாருங்கள். 80% மக்கள் வெளியூர்க்காரர்களாக தான் இருப்பார்கள். எல்லோரையும் துரத்திவிட்டால் என்னத்த தொழில் செய்வீர்கள்? நாக்கக் கூட வழிக்க முடியாது
காட்சி 2:
'ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகியவற்றை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும்.' என்கிறார் ஒருவர். அய்யா சாமி, நீங்க என்ன ராசா காலத்துலயா இருக்கீங்க? போர் தொடுத்து எல்லைகளை விரிவுப்படுத்த? எல்லோரும் இந்தியாகுள்ள தானே இருக்கோம்? அப்புறம் ஏனிந்த அறிவிலித்தனம்? உங்க அக்கப்போர் தாங்கலப்பா...
வந்தாரை வாழவைப்பது நீங்களா? அய்யோ, சிரிப்பு தான் சாமி வருது
பதித்தது : ச.பிரேம்குமார் 5 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
வேலைவாய்ப்பு செய்தி : சென்னை
கீழ்கட்டளையில் உள்ள TVS SHOWROOM ஒன்றுக்கு ஓரளவுக்கு படித்த (10 அல்லது 12ம் வகுப்பு), இரண்டு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் உள்ள ஆண் வேலைக்கு தேவை. தொடக்க சம்பளம் 2500/ ரூபாய்
தொடர்புக்கு:
மஹாலட்சுமி மோட்டார்ஸ்
3, மேடவாக்கம் பிரதான சாலை,
கீழ்கட்டளை,
சென்னை 117
தொலைப்பேசி : 42185050
MAHALAKSHMI MOTORS
3, MEDAVAKKAM MAIN ROAD,
KEELKATTALAI
CHENNAI 117
Phone : 42185050
பதித்தது : ச.பிரேம்குமார் 0 கருத்துக்கள்
எழுத்து வகை: வேலைவாய்ப்பு
28 March 2008
நானும் காதலிக்கிறேன் - 3
நானும் காதலிக்கிறேன் - 2
ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு...
'சாப்பிடப் போலாமா?' கார்த்திக்கின் கணிணியில் ரமணியின் மின் செய்தி கண்ணடித்துக்கொண்டிருந்தது
நீண்ட வரிசையில் காத்திருந்து சாப்பாட்டை வாங்கி, உட்கார இடம் தேடி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்ததுமே புலம்பத் தொடங்கினான் ரமணி. 'எவ்வளவு சம்பாதிச்சு என்ன புண்ணியம்? ஒழுங்கா சாப்பிட முடிய மாட்டேங்குது. அலுவலகத்துல கிடைக்கிற சாப்பாடு வர வர வாய்லேயே வைக்க முடியல. சீக்கிரம் அம்மா அப்பாவ இங்கேயே வர சொல்லிடனும்'
'அட ஏன்டா இவ்வளவு புலம்புறே? பேசாம கல்யாணம் பண்ணிக்கோயேன்' என்றான் கார்த்திக்
'நீ வேற ஏன்டா? இப்போ யார் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறா? சரி, உன் கதை என்னாச்சு? எப்படி போகுது உன் காதல் ?'
கா : 'அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்'
ர: 'டேய் என்ன இது நிச்சயதார்த்தம்னு இவ்வளவு பொறுமையா சொல்லுற? வீட்டில எப்போ சொன்னே? எப்போ பேசி முடிச்சாங்க?'
கா : 'நிச்சயதார்த்தம்னு சொன்னேன். எனக்குன்னா சொன்னான்? அவளுக்கு நிச்சயதார்த்தம். வேற ஒருத்தர் கூட.'
ர: 'இது அதவிட கொடுமயா இருக்கு. என்னடா நடக்குது இங்கே?'
'அவ என்கிட்ட காதல் சொல்லல. அவ காதலிக்கிறாளா இல்லையான்னே தெரியல. சொல்லப்போனால், நானே அவள காதலிக்கிறேனான்னு இன்னும் சரியா தெரியலடா' என்று சொல்லிக்கொண்டே புன்னகைத்தான் கார்த்திக்
ர :'உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா கார்த்தி. எப்படி உன்னால இத சாதாரணமா எடுத்துக்க முடிஞ்சது?'
கா : 'இதுல வருத்தப்பட என்ன இருக்கு? ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கிட்டாலே அது காதலா தான் இருக்கனுமா? இதுவே அவள நான் மனப்பூர்வமா தோழியா நினைச்சிருந்தா, இந்நேரம் அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போறத நினைச்சு ரொம்ப சந்தோசப்பட்டுருக்கனும். இந்த விசயத்துல, ஒரு வேளை இது காதல் தான்னு நினைச்சு அவசரப்பட்டு இருந்தா, பின்னால வருத்தப்பட கூட வேண்டியிருந்திருக்கும்.
காதல்னா என்ன என்ற சரியான புரிதல் இல்லாம, எல்லோரும் காதலிக்கிறாங்க, அதுபோலவே 'நானும் காதலிக்கிறேன்'ன்னு நானே ஒரு தப்புக் கணக்கு போட்டுக்கிட்டேன். அவ்ளோதான்டா
ர : என்னவோ போப்பா, உனக்கு காதல் கை கூடலயேன்னு நினைக்கிறத விட, என்ன நடந்தது, ஏன் நடந்ததுன்னு புரிஞ்சுக்குற மனப்பக்குவன் உனக்கு இருக்கே. அதுக்கு நான் ரொம்ப சந்தோசப்படுறேன். உனக்கான காதல் எதுன்னு நீ தேட தேவையில்லை. சந்தர்ப்பம் வரும் போது காதலே உனக்கு அதை உணர்த்திவிடும்.
அவன் சொன்னதை புன்னகைத்துக்கொண்டே ஆமோதித்தான் கார்த்திக்.
நண்பர்களின் முற்றுப்பெறாத பேச்சினூடே வழக்கமான உற்சாகத்துடன் மீண்டும் நகரத்தொடங்கியது காலம்
முற்றும்
Technorati Tags கதை,காதல்
பதித்தது : ச.பிரேம்குமார் 10 கருத்துக்கள்
24 March 2008
புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு - CHANGEPOND TECHNOLOGY, CHENNAI
Dear All,
We are looking to add new set of freshers to meet the upcoming Resource
needs at Changepond.
Pls. do refer your friend or a relative to be your peer and help
building Changepond...
Here are the fundamentals on the basic requirements…
Ø The candidates with BE/BTech or ME/MTech in any discipline with
aggregate of 75% and above.
Ø Candidates should have strong Analytical, Aptitude and Logical
Skills.
Ø Possess knowledge in Basic Programming (Java & .net) & Computer
Skills.
Ø Excellent Communication Skills.
[LINK:
mailto:careers@changepond.com]
குறிப்பு : மின்னஞ்சலில் வந்த செய்தி
பதித்தது : ச.பிரேம்குமார் 2 கருத்துக்கள்
20 March 2008
பேருந்தில் பயணிக்கும் அஃறினைகள்
மாநகரப் பேருந்தில் பயணிக்கும் போது பல சுவாரசியமான சம்பங்கள் நடந்துள்ளன. இனிய பயணமாகவே அவை அமைந்து விடுவதுண்டு. ஆனால் இன்று நடந்தது போல இரண்டொருமுறை, பயணம் மிக கொடுமையானதாகவும் இருந்திருக்கிறது.
PEAK HOURSல் அமர இடம் கிடைப்பது அரிதிலும் அரிது. நடுவில் யாராவது எழுந்தாலும் அதைப் பிடிக்க சுற்றியிருப்பவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வந்துவிடுவார்கள். மறுமுனையில் இருப்பவர் அந்த இருக்கையை பிடிக்க ஓடோடி வருவார். இந்த காரணங்களாலும், பயண தூரம் அதிகம் இல்லையென்பதாலும் நான் உட்காருவது பற்றி யோசிப்பதேயில்லை. அதே சமயம், தொங்கிக்கொண்டு போவதும் பிடிக்காது.
ஆனால் இன்று வெகு நேரமாக பேருந்த வராததால், கூட்டமாக இருந்த பேருந்தில் ஏறி தொங்கிக்கொண்டே வர நேர்ந்தது. எல்லோரும் பாவம் கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள் போலும் என்று உள்ளே எட்டிப்பார்த்தால் உள்ளே நிறைய இடம் காலியாகத்தான் இருக்கிறது. ஆனால் மக்கள் உள்ளே நகராமல் பாதையிலேயே நின்றுக்கொள்(ல்)கிறார்கள்
சிலருக்கு இன்னும் சில நிறத்துங்களில் இறங்க வேண்டும், அதனால் உள்ளே போனால் வெளியே எளிதில் வர இயலாது என்ற எண்ணம், இடிமன்னர்கள் / திருடர்கள் / ஜொள்ளர்கள் இவர்களுக்கும் வாசல் அருகே நின்றுக்கொண்டு பயணம் செய்வதே பிடிக்கும் போல. உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கும் வாசம் அருகே பயணம் செய்ய, ஆனால் கொஞ்சம் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் அக்கறை இருக்க வேண்டாமா?
முன்பெல்லாம் உள்ளே கூட்டமாக இருந்தால் புழுக்கமாக இருக்கும் என்று ஜன்னலருகேயும், வாசல் அருகேயும் மக்கள் பயணிப்பதுண்டு. ஆனால் இப்போது அந்த பிரச்சனையுமில்லை. பேருந்துகளில் மேலே ஒரு திறப்பு வைத்திருக்கிறார்கள். அதன் வழியாக பேருந்து போகும் வேகத்துக்கு சிலுசிலுவென காற்று உள்ளே வருகிறது.
ஆனாலும் மக்களுக்கு உள்ளே செல்ல மனமில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்று பயணிக்கையில் கிட்டத்தட்ட நானும் சிலரும் ஒற்றைக் கைப்பிடிமானத்தில் தான் பயணித்துக்கொண்டிருந்தோம். 'உள்ளே போங்க, அவ்வளவு இடம் இருக்கே' என்றால் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. முன்னாடி இருப்பவரோ , 'நான் என்ன செய்வேன், எனக்கு முன்னாடி நிக்கிறவுங்க நகர மாட்டேங்குறாங்க' என்று சொல்கிறாரே தவிர, அவரை நகரச் சொல்லும்படி சொல்லவில்லை. அவரும் படிக்கட்டில் நிற்கிறார் எனினும், அவருக்கு அசெளகரியம் ஏதும் இல்லை. ஆக பின்னாலிருப்பவர்கள் என்னவானாலும் அவருக்கு கவலை இல்லை.
'அண்ணா, உள்ளே போகச் சொல்லுங்கண்ணா' என்று நடத்துனரிடம் சொல்லியும் பிரயோசனமில்லை. இதெல்லாம் அவர் வேலையில்லை என்று நினைக்கிறார். இரண்டு நிறுத்தங்களுக்கு அப்புறம் பேருந்தில் கூட்டம் குறைந்த பிறகு 'மேலே ஏறி வாங்க' என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். 'யாரும் இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ ஆத்துறீங்க?'
பின்னால் நிற்கும் ஒருவரிடம் சொன்னால் அவர் கடலை போடுவதில் மும்முரமாய் இருக்கிறார். அங்கே நிற்கும் பெண்கள் எல்லாம் தோடு மாட்ட மட்டும் காதுகளை பயன்படுத்துவார்கள் போலும்.
'யாருக்கும் காது கேட்டுத் தொலையாதா? அவனவன் தொங்கிக்கிட்டு வரும்போது தான் தெரியும். உள்ளே போனா கவுரவம் கொறஞ்சுடுமா என்ன?' என்று கோபத்தில் கத்திவிட்டு வந்தேன். ஆனால் எருமை மாடு மேல் மழை பெய்த மாதிரியே இருந்தார்கள் என் சகபயணிகள். பதியமுடியா ஒரு கெட்ட வார்த்தை வாய் வரை வந்துவிட்டது. ஆனால் இந்த அஃறினைகளிடம் என்ன பேசி என்ன பயன்?
பதித்தது : ச.பிரேம்குமார் 9 கருத்துக்கள்
17 March 2008
கண்ணதாசன் காரைக்குடி
கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப்போல்
பாடப் போறேன் டா
கண்ணாடி கோப்பையில கண்ணமூடி நீச்சலடி
ஊறுகாயத் தொட்டுக்கிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்துக் குடிச்சா அது ஒரு சோஷலிஸம் தான்
பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க
இல்லா இடம் இந்த இடம் தானே
இந்த இடம் இல்லயின்னா சாமி மடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே
இயக்குனர் ஆரு அங்க பாரு பொலம்புறாரு
நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையே
நூறத் தாண்டுனா நடக்க பாதை இல்லையே
(கண்ணதாசன் காரக்குடி)
அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்கே வந்தா
டப்பாங்குத்து தானே
ஓவரா ஆச்சுத்துன்னா வெட்டுக்குத்து தானே
எங்களுக்கு தண்ணியில கண்டம் இல்ல
எங்களுக்குள் ஜாதி மதம் இரண்டும் இல்ல
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சு
வேட்டி அவுந்துப் போச்சு
ரோட்டுக் கடையில் மனுஷன் ஜாலியப் பாரு
சேட்டுக் கடையில் மனைவி தாலியப் பாரு
(கண்ணதாசன் காரக்குடி)
Technorati Tags திரைப்பாடல்
பதித்தது : ச.பிரேம்குமார் 3 கருத்துக்கள்
14 March 2008
கத்தாழக் கண்ணால...
மிதமான BEAT உடன், ஆபாசமில்லாத வரிகளுடன், இதயத்தையும் கால்களையும் ஆட்டுவிக்கும் சுகமானப் பாடல். திரையிலும் அழகாய் நடனமாடுகிறார் ஸ்நிகிதா. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு குத்துப்பாட்டு :-)
படம் : அஞ்சாதே
வரிகள் : கபிலன்
தகிட தகிட தகிட.........தா
தகிட தகிட தகிட.........தா
கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை
கூந்தல் போர்வையில் குடிசயப் போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப்பூட்டு
கண்ணே தலையாட்டு
காதல் விளையாட்டு
கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூத்த மேலாக்கு நீ
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவென பேசும் புல்லாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக்காரிங்க.......
(கத்தாழக் கண்ணால)
கருகருவென கூந்தல் கைவீசுதே
துருதுருவென கண்கள் வாய்பேசுதே
பளபளவென பற்கள் பல்கூசுதே
பகலிரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோடு கண்ஜாடை இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்
(கத்தாழக் கண்ணால)
Technorati Tags திரைப்பாடல்
பதித்தது : ச.பிரேம்குமார் 6 கருத்துக்கள்
13 March 2008
நானும் காதலிக்கிறேன் - 2
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!
- அருட்பெருங்கோ
“ஏன் தம்பி? இந்த செல்பேசியை வாங்குன புதுசுலக் கூட அதை இப்படி கட்டிக்கிட்டி திரிய மாட்டே. இப்ப என்னடான்னா, கங்காரு மாதிரி அத எப்பப் பாத்தாலும் சுமந்துக்கிட்டே இருக்கே. சாப்பிடும் போதாவது அதக் கொஞ்சம் தள்ளி வைக்கக் கூடாதா?” அம்மா கேட்ட போது கார்த்திக் ஒரு பெரும் புன்னகையை மட்டும் பதிலாய் தந்தான். அவனுக்கே அந்த மாற்றம் விசித்திரமாய் தான் இருந்தது. வீட்டிலேயும் சரி, வெளியிலும் சரி அதிகம் பேசாதவன் இப்போதெல்லாம் தர்ஷினியிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறான். செல்பேசியில் பேசிப்பேசி அவன் காதுகளில் சென்னையின் சூடு இருந்தாலும், உள்ளத்திலோ ஊட்டியின் குளுமைதான் இருந்தது.
அலுவலகத்தின் உணவறைக்கு கார்த்திக்கும் அவன் நண்பன் ரமணியும் நுழைந்து எதை சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளை, அவர்களோடு பணிபுரியும் செந்திலும் அங்கு வந்தடைந்தான்.
செ : ‘ஏன்ப்பா கார்த்தி, அந்த headphones’அ கழட்டவே மாட்டியா? இசையார்வம் இருக்க வேண்டியது தான், அதுக்காக…..’
இடையிலேயே மறித்த ரமணி சிரித்துக்கொண்டே சொன்னான் ‘செந்தில், அவன் பாட்டு கேக்குறானா இல்லை கடலைய போடுறானான்னு சரியா கவனி’
செ: ‘நண்பா சொல்லவே இல்லை, என்ன நடக்குது இங்கே’
ர: ‘யோவ் விசயமே தெரியாதா? பையன் போன மாசம் மட்டும் செல்பேசிக் கட்டணமா இரண்டாயிரம் ரூபாய் கட்டியிருக்கான். இதுக்கு மேல நீயே யூகிச்சிக்கோ’
செ: ‘கார்த்திக், சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டியா? யாரு? என்ன செய்யுறாங்க? எப்போ கல்யாணம்? சொல்லுப்பா சொல்லு. முக்கியமா விருந்து எப்போ சொல்லு’
கா: ‘ஏஞ்சாமி, நான் அரசமரத்த சுத்துறேனா புளியமரத்த சுத்துறேனான்னே இன்னும் தெரியல. நீ அதுக்குள்ள புள்ளைக்கு பேர் வைக்க கெளிம்பிட்ட. உனக்கு என்ன, எப்படியோ என்கிட்ட ஆட்டய போட்டு, பொன்னுசாமில ஆடு திங்கனும். அதானே உன் கணக்கு?!’
ர: சரி, அதெல்லாம் இருக்கட்டும், ஞாயிற்றுக்கிழமை வெளில போறதா இருந்தீங்களே, போனீங்களா?
கா: ம்ம்ம்
ர: அடிங்க, நாங்க என்ன கதையா சொல்றோம், ம்ம்ம் கொட்டுற?
கா: ம்ம்ம், ஸ்க்ரைப் பண்ணப் போனோம்டா
செ: ஸ்க்ரைபா? அதென்னடா, எதாவது குதூகலமான விளையாட்டா?
கா: ‘யோவ் யோவ், நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா? ஸ்க்ரைப்னா, பார்வையற்றோர்க்கு ப்ரெயில் முறையில் இல்லாத பாடங்களை படித்துக் காட்டுவது, அவுங்க சொல்லச் சொல்ல அவர்களுக்காக தேர்வு எழுதுவது மாதிரியான விசயங்கள்’.
செ: அடப்பாவி, பொண்ணுக்கு உன் மேல நல்ல அபிப்ராயம் வரவைக்க இப்படி ஒரு முயற்சியா? படம் தாங்கலியே
கா: நீ வேற, தர்ஷினி இத ரொம்ப வருசமா செய்துக்கிட்டு இருக்காளாம். நான் சும்மா கூட தான் போனேன். ஆனா அங்க போன உடனே எனக்கும் ஒரு ஆர்வம் வந்துருச்சு. உருப்படியா ஏதோ செஞ்சோம்னு மனசுக்கு நிறைவா இருந்துச்சு’
ர: கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு கார்த்தி.
செ: நல்ல விசயம் தான். ஆனா புல்லரிப்பு ரொம்ப அதிகமாயிடுச்சு. கூடவே நேரமும். சங்கத்தை உடனே கலைங்க. அப்புறம் மேலாளர் கோளாறு பண்ணிடுவாரு.
ஞாயிறு மாலை 5 மணி
“வித்யா, எங்கம்மா கெளம்பிக்கிட்டுருக்கே?” கார்த்திக்கின் கேள்வியில் அதிர்ந்தே போனாள் வித்யா.
“என்னடா திடீர்ன்னு பாசம் பொங்குது? கல்லூரித் தோழி ஒருத்தியோட கல்யாணத்திற்கு போறேன்”
“எங்கே?”
“வடபழினியில”
“அவ்வளவு தூரம் எப்படி தனியா போவே? இரு, நானும் வரேன்” என்று நகரப் பார்த்தவனைப் பிடித்து நிறுத்தினாள் வித்யா
“யேய் என்ன இதெல்லாம். ஓவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு சோழிங்கநல்லூர் வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு நாள் கூட கஷ்டமா இருக்கான்னு விசாரிச்சதில்லை. இன்னிக்கு கே.கே. நகரில இருந்து வடபழநி தூரமா தெரியுதுன்னா கண்டிப்பா ஏதோ உள்குத்து இருக்கு” என்றபோது வித்யாவின் பார்வையில் ஆச்சரியமும் சந்தேகமும் சரிக்கு சரியாய் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தன.
தர்ஷினி அந்த திருமணத்திற்கு வரப்போவதை கார்த்திக் அறிவான். ஆனால் அது வித்யாவிற்கு தெரியுமா தெரியாதா? தெரிந்தே கேட்கிறாளா ? எதுவும் புரியாது குழம்பித் தவித்தான். இருந்தாலும் ஏற்கனவே தனக்கு தெரியும் என்பதை வித்யாவிற்குக் காட்டிக்கொள்ள விரும்பாமல்
“அட தனியா போறியேன்னு கேட்டா இப்படி அபாண்டமா பழிப்போடுற? போம்மா, என் மனசக் கஷ்டப்படுத்திட்டே” எனச் சொல்லிவிட்டு வித்யாவின் பதிலை எதிர்பாராமலேயே கிளம்பலானான் கார்த்திக்.
எப்போதும் உடைகளில் கவனம் செலுத்தாதவன், அன்றைக்கு ஒரு மணி நேரமாய் தயாராகிக் கொண்டிருந்தான். தனக்கு பொருத்தமான உடைகளை உடுத்தினான். அவனைப் போல் படியாத அவன் தலைமுடியும் இன்று அழகாய் படிந்துவிட்டது. ஒரு வேளை கார்த்திக்கும் சீக்கிரமே யாரிடமும் பணிந்துவிடுவானோ என்னவோ? அவன் உதட்டில் மலர்ந்து உதிர்வேனா என்று அடம்பிடித்த புன்னகையோஅவனை மேலும் அழகாய் காட்டிக்கொண்டிருந்தது.
திருமணக் கூடத்தில் நுழைந்ததுமே எதிர்ப்பட்டாள் தர்ஷினி. அந்தி வானத்தில் கொஞ்சம் கிழித்தெடுத்து புடவையாய் தரித்திருந்தாள். ஆனால் அந்திவானம் மின்னுமா? இவள் புடவை மின்னுதே? ஒரு வேளை அவள் மினுமினுப்பு அந்த புடவையிலும் ஒட்டியிருக்கக் கூடும். விண்மீன்கள் இரண்டை பறித்து காதுகளில் மாட்டியிருந்தாள். ஆர்ப்பாட்டமில்லாத அழகு தர்ஷினியுடையது. ஆனால் இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது தான் கார்த்திக்கின் கண்களுக்கு திடீரென தர்ஷினி அழகாய் தெரிகிறாள்.
‘அழகான பெண்கள் எல்லாம் காதலிக்கப் படுவதில்லை
காதலிக்கப்படும் பெண்கள் எல்லாம் அழகாய் இருக்கிறார்கள்’
என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.
இன்றும் தர்ஷினியை வீடு வரைக்கும் கொண்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டு தர்ஷினியின் பக்கமே பார்வையை வீசிக்கொண்டிருந்தபோது , ‘நேரமாயிடுச்சு, கிளம்பலாமா?’ எனச்சொல்லிக் கொண்டே கிளம்பினாள் வித்யா. கார்த்திக்கால் மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை. நேரம் சரியில்லைன்னா ஒட்டகத்துல போனாலும் நாய் எகிறி வந்து கடிக்கும்’னு சும்மாவா சொன்னாங்க என்று நினைத்துக்கொண்டே வித்யாவை பின் தொடர்ந்தான்
- மீண்டும் காதலிப்போம்
நானும் காதலிக்கிறேன் - 1
பதித்தது : ச.பிரேம்குமார் 9 கருத்துக்கள்
15 February 2008
நானும் காதலிக்கிறேன் - 1
'டேய் அண்ணா, இப்போ நீ எங்கக் கூட கல்யாணத்துக்கு வர போறீயா இல்லையா?' நான்கு முறை அவள் கேட்ட பின்பும் பதிலில்லாத காரணத்தால் கத்திவிட்டாள் வித்யா.
'போடி.. நான் ஒன்னும் வரல. அங்கே யாரையும் எனக்கு தெரியாது. நான் வந்து என்ன செய்ய போறேன்? உனக்கு பாதுகாப்பு படையா வரனுமா? ' ஒரு கேவலமானப் பார்வை பார்த்துவிட்டு சொன்னான் கார்த்திக்
'டேய் சும்மா இங்க உக்காந்து தொலைக்காட்சிய பாத்துக்கிட்டு இருக்குறதுக்கு அங்க வந்தினா, ஏதாவது பொண்ணு அமையிதான்னு பாப்போம். உனக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கனுமே' சிரித்துக்கொண்டே சொன்னாள் அம்மா
'ஆமாமா.... இவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிட்டாலும். பாவம்மா எனக்கு அண்ணியா வர போறவ. இவன கட்டிக்கிட்டு என்ன பாடுபட போறாளோ?' நொந்துக்கொண்ட வித்யாவை முறைத்துக்கொண்டே அம்மாவை நோக்கி கத்தினான் 'சரி சரி ரொம்பப் படுத்தாதே, கிளம்புறேன்'
'அடப்பாவி, பொண்ணுங்கன்ன உடனே கிளம்புறான்ம்மா'
ஒரு வழியாய் மண்டபத்தை வந்து அடைந்தார்கள் மூவரும்.
'டேய் கார்த்தி, என் தோழிகள் வந்தாங்கன்னா ஒரு நாகரீகத்துக்காக உன்னை அறிமுகப்படுத்துவேன். அதுக்காக ரொம்ப வழிஞ்ச... மவனே தொலஞ்ச! "
'போடி ரொம்பத்தான். உன் தோழிகள் பத்தியெல்லாம் தெரியும். என் அளவுக்கு அறிவா அழகா...ம்ஹீம்! ஒருத்திக்கூட தேறமாட்டா'
'அய்யே.. இவரு பெரிய மன்மதன். வாய மூடுடா. அண்ணான்னு கூட பாக்க மாட்டேன்'
அவர்கள் இருக்கை தேடி அமரும் முன்பே வித்யாவின் நண்பன் அருண் எங்கிருந்தோ வந்தான்.
'ஹே வித்யா, எப்படி இருக்கே? கல்லூரி முடிஞ்சு பாக்கவே முடியல. எங்கள எல்லாம் மறந்துட்டியா?'
'அப்படியெல்லாம் இல்ல அருண். அலுவலகத்தில நிறைய வேலை. அதான் இப்போவெல்லாம் நம்ம குழுமத்துக்கு மடல் கூட அனுப்ப முடிவதில்லை'
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் மற்ற வகுப்புத்தோழர்களும் வந்து சேர்ந்தார்கள்.
'ஓ! செல்பேசியெல்லாம் வாங்கிட்டியா? எங்களுக்கெல்லாம் தொடர்பு எண் குடுக்க கூடாதா என்ன?'
'அப்படியெல்லாம் ஒன்னுமில்லப்பா' என்று சொல்லி இருவரும் தொடர்பு எண்களை பரிமாறிக்கொண்டார்கள்
'அப்புறம் வித்யா, அப்பப்போ கூப்பிட்டு பேசாமல் போனாலும், ஒரு 'மிஸ்டு கால்'ஆவது கொடு. நீ உயிரோட இருக்குறேன்னு தெரிஞ்சுக்கனும் இல்லையா?'
'நீ இன்னும் மாறவேயில்லை அருண்'
'அப்புறம் எப்பவாவது பேசவும் செய். இல்லைன்னா உனக்கு பேச்சு வரலையோன்னு ஒரு சந்தேகம் வந்துரும்'
மங்கள வாத்தியங்களையும், இசைக்கச்சேரியையும் தாண்டி அவர்கள் சிரிப்பொலி மண்டபமெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்து தோழர்களும் தோழிகளும் வந்து சேர கல்யாண மண்டபமே கலை கட்டியது. கல்லூரி முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் அனைவரும் சந்திப்பதால் விசாரிப்புகளும் அரட்டைகளும் ஓயவேயில்லை.
சற்று தாமதமாய் வந்து சேர்ந்தாள் தர்ஷினி. வித்யாவின் நெருங்கிய தோழி. பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாக படித்தவர்கள். வித்யா வீட்டிற்கு அவ்வப்போது வருபவள் என்றாலும் கார்த்திக் அவளிடம் அதிகமாய் பேசியதில்லை. ஆனால் அன்று அவளின் ஆர்ப்பாட்டமில்லாத அழகும் அளவான சிரிப்பும், கார்த்திகை வசீகரிக்க தவறவில்லை.
"சொல்ல மறந்துட்டேன், இது எங்க அம்மா, இது என் அண்ணன்" என நண்பர்களிடம் சொல்லிவிட்டு அவர்கள் பேரை எல்லாம் ஒப்பித்தாள் வித்யா. சரியாக தர்ஷினியின் முறை வருகையில் ஏற்கனவே வீட்டிற்கு நன்கு தெரிந்தவள் தானே என அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டாள்.
கார்த்திக்கு இது எதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை. இது வித்யாவின் திட்டமிட்ட சதி என்று நினைத்து அவளை முறைத்துக்கொண்டிருந்தான்.வித்யாவோ நண்பர்களை பார்த்த சந்தோசத்தில் அதையெல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை.
~~~~&&&~~~~
ஒரு வழியாக மேடைக்கு சென்று மணமக்களை கடுமையாக கலாட்டா செய்துவிட்டு, சாப்பாட்டு பந்தியில் அட்டகாசம் செய்துவிட்டு, பழைய நினைவுகளை கிண்டி பார்த்துவிட்டு நண்பர்கள் குழாம் புறப்பட தயாரானது.
"தர்ஷினி, நேரம் ரொம்ப ஆச்சே. தனியா போரூர் வரைக்கும் போயிடுவியா?" அப்போது தான் நேரத்தை கவனித்த வித்யா கேட்க
"அதெல்லாம் பரவாயில்லைப்பா. நான் பாத்துக்குறேன்' என்றாள் தர்ஷினி.
"ஏம்மா எவ்வளவு தூரம்? இரு, என் பையனை உன்னை வீட்டில விட சொல்றேன்" என சொல்லிய அம்மாவை ஒரு புன்னகைப் பார்வை பார்த்தான் கார்த்திக்.
"சரிம்மா"
"ஏண்டி, ஒரு பேச்சுக்குக்காகவாவது இல்லை, அவுங்களுக்கு எதுக்கு சிரமம் அப்படி இப்படின்னு ஏதாவது சாக்கு சொல்றியா? உடனே சரின்னு சொல்லிட்டே. என்னடி எங்கண்ணன பாக்குறியா? என வித்யா கிசுகிசுக்க, வெட்கத்தில் சிவந்தாலும் "ரொம்பத்தான் ஆசை" என்றபடி புறப்பட தயாரானாள் தர்ஷினி.
வித்யா அவள் வண்டியை எடுக்க அவளையும் அம்மாவையும் வழியனுப்பிவிட்டு தர்ஷினியும் கார்த்திக்கும் போரூர் நோக்கி புறப்பட்டார்கள்
போக்குவரத்து நெரிசல் பற்றியும் போகும் வழி பற்றியும் பேசிய நிமிடங்கள் தவிர அனேகமாய் அவர்கள், தங்களை முன்னின்று வழிநடத்திக்கொண்டிருந்த நிலவோடு மட்டுமே கண்களால் பேசிக்கொண்டிருந்தார்கள்
பிரதான சாலையில் இருந்து திரும்பி சில குறுகலான சாலைகளில் செல்ல வேண்டியிருந்தபோது 'நெடுஞ்சாலையிலிருந்து உள்ள போகும் வழி கொஞ்சம் சிக்கலானது. நல்லா பாத்துங்க ' என ஒரு எச்சரிக்கை மணி அடித்தாள் தர்ஷினி. ஆனால் கார்த்திக்கோ அது சங்கேத மணி போல் கேட்டது. "ரொம்ப நன்றி, வீனா உங்கள் இவ்வளவு தூரம் அலைய வச்சிட்டேன்" என சொன்ன அவளுக்கு வெறும் புன்னகையை மட்டும் பதிலாய் தந்துவிட்டு வண்டியை கிளப்பினான்.
'இவன் எதுக்கு இப்போ கூப்பிடுறான்' என்று கேட்டுக்கொண்டே கார்த்திக்கின் அழைப்பை எடுத்தாள் வித்யா.
'ஹே, உன் தோழி பேரு என்ன?'
"ஏன்டா, அது தெரியாமயா அவள அவ்வளவு தூரம் கூட்டிக்கிட்டு போன?"
"ப்ச்ச்ச்"
"சரி சரி. அவ பேரு தர்ஷினி. இப்போ அதுக்கு என்ன?"
"அவ செல்பேசி எண்ண எனக்கு அனுப்பு"
"எதுக்கு?"
"ஏன்டி, மனசுல பெரிய அவ்வையாருன்னு நினைப்பா? எதுக்கெடுத்தாலும் ஏன் எதுக்கு கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பா. வழி மறந்து போச்சு. அதான் கேக்கனும், போதுமா? மரியாதையா சொன்னத செய்" அவள் பதிலுக்கு காத்திராமல் தொடர்பை துண்டித்தான்
எண் கிடைத்ததும் தர்ஷினியை அழைத்து வழி தவறிவிட்டதை சொன்னான். அவள் வழி கூறி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக்கொண்டான்.
மனதிற்குள் சிரித்துக்கொண்டே ஏற்கனவே நெடுஞ்சாலையை அடைந்திருந்த அவன் வண்டியை கிளப்பினான்
அவன் செல்பேசியிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த பண்பலையின் தொகுப்பாளினி மூச்சுவிடாது ஏதோ பேசிவிட்டு இறுதியில் ஒரு பாடலை ஒலிப்பரப்பினாள்
" நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று என்காதில் ஏதோ சொன்னது"
NETRU.MP3 |
- தொடரும்...
பதித்தது : ச.பிரேம்குமார் 12 கருத்துக்கள்
14 February 2008
இது காதல் தினம்
அவ்வப்போது காதல் கவிதைகள் இட்டுவந்தாலும், அது என்னவோ சரியாக பிப்-14 அன்று எதுவும் சிந்திக்க முடியாத வண்ணம் வேலைப்பளு வந்துவிடுகிறது.
அதனால் எனக்குப் பிடித்த சில காதல் பதிவுகளின் தொகுப்பு இங்கே :)
காதல் தினம் - ஸ்ரீ
மேலும் காதலுக்கு ஒற்றை அன்றில்
காதல் வா(வ)ரம் - அருட்பெருங்கோ
மேலும் காதலுக்கு - அமராவதி ஆத்தங்கரை
காதல் மழை - எழில்பாரதி
கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
நனைக்க வந்த
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!
மேலும் காதலுக்கு - கண்ணாடி மழை
காதல் குறிப்புகள் - ப்ரியன்
மேலும் காதலுக்கு - ப்ரியன் கவிதைகள்
காதல் யாதெனில் - கோபால்
பதித்தது : ச.பிரேம்குமார் 3 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள், காதல், பதிவர் வட்டம்
6 February 2008
கவிஞர் தபூ சங்கருக்கு திருமண வாழ்த்துக்கள்
காதல் கவிஞர் தபூ சங்கருக்கும் செல்வி.ஜெயலட்சுமிக்கும் வரும் 10ம் தேதி (பிப்ரவரி 10, 2008) சேத்தியாதோப்பில் திருமணம் நடைபெறுகிறது. காதல் கவிஞர் காதல் மாதமான பிப்ரவரிலேயே திருமணம் செய்துக் கொள்வது சிறப்பு. திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
காதல் கவிதைகள் எழுதவதில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டவர் தபூ சங்கர். எளிய நடையில், அழகுத்தமிழில் காதலை மட்டுமே மையமாகக் கொண்ட கவிதை தொகுப்புகளின் சொந்தக்காரர். வலைப்பூவுலகம் சார்பாக தபூ சங்கருக்கு திருமண வாழ்த்துக்கள். அவரின் திருமண வாழ்வு சிறப்பாக அமையவும் அவர் காதல் கவிதைகள் மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்
தபூ சங்கரின் சில படைப்புகள்:
தேவதைகளின் தேவதை
விழியீர்ப்பு விசை
இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்! காதல் பிறந்திருக்கிறது
எனது கறுப்புப் பெட்டி
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ
நெஞ்சவர்ணக்கிளி
திமிருக்கும் அழகென்று பெயர்
பார்த்தால்சிணுங்கி
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
மழையானவள்
சேலையோரப்பூங்கா
பதித்தது : ச.பிரேம்குமார் 10 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
இது காதல் காலம் - 12
பதித்தது : ச.பிரேம்குமார் 9 கருத்துக்கள்
எழுத்து வகை: LOVE SEASON, இது காதல் காலம்
2 February 2008
இது காதல் காலம் - 11
பதித்தது : ச.பிரேம்குமார் 15 கருத்துக்கள்
எழுத்து வகை: LOVE SEASON, இது காதல் காலம்
31 January 2008
எழுதியதில் பிடித்தது
ரொம்ப முன்னுரையெல்லாம் போட்டு இந்த பதிவப் போடப் போறதில்லை. ஏன்னா, எப்படியும் இத யாரும் படிக்கப் போறதில்லை. ஹி ஹி ஹி!
எழில் அழைத்தமைக்காக இந்தப் பதிவு
2007ல் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தது பிப்ரவரியில் எழுதிய 'இது காதல் காலம்'
அதெப்படி நமீதா பதிவ விடலாம்னு கேக்குறீங்களா? அது தான் 2007ல் நான் எழுதியதில் மக்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு. இதுவரைக்கும் என் வலைப்பூவில் அதிகமாக பார்வையிடப்பட்ட பதிவு அது தான் :)
ஆனா அதுக்கு காரணம் பதிவா இல்ல நமீதாவான்னு சொல்ல தேவையில்லை இல்லையா? ;)
பதித்தது : ச.பிரேம்குமார் 4 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள், பதிவர் வட்டம்
30 January 2008
ப்ளாக்கருக்கு ப்ரேக் பிடிக்கல
மக்கள் எல்லாம் அழகா கவிதையும் எழுதி அத அழகான படங்களிலும் இணைத்து போட்டுடுறாங்க. நமக்கோ கவிதையும் ஒழுங்கா எழுத வரல, படங்களிலும் சரியா இணைக்க தெரியலை, சரி குறைந்தப்பட்சம் கவிதை பக்கத்தில நல்ல படங்கள் போட்டாவாவது ஒரு 'ஸ்பெஷல் எபெக்டு' கிடைக்குதான்னு பாக்க, அப்படி ஒரு முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.
முயற்சி செய்த பதிவு : காதல் கார்த்திகை
Bloggerல் HTML TABLE வசதி இல்லாததால், நாமளே தான் நிரல் எழுத வேண்டியிருக்கிறது. TABLE போட்டு ஒரு பக்கம் கவிதையும் ஒரு பக்கம் படங்களும் போடலாம் என்று முடிவு செய்து நிரலை முடித்தாயிற்று. ஆனால் பதிவை இட்டுப் பார்த்தால் தலைப்பு புதுவையிலும் பதிவு சென்னையில் இருந்துக்கொண்டு பல் இளித்தது. என்ன என்னவோ செஞ்சு பாத்து, இருக்குற கொஞ்ச நஞ்ச மூளையையும் பிச்சு பிறாண்டினாலும் ஒன்னும் புரியல.
கடைசியில் கூகுளாண்டவர் காலில் விழுந்த போது தான் புரிந்தது, "ப்ளாகருக்கு ப்ரேக்
பிடிக்காதாம்". அதனால் தான் ப்ரேக் பிடிக்காத வண்டி போல் பதிவு தலைப்பை விட்டு வெகு தூரம் போய் நின்றிருந்தது.
முதலில் TABLE பயன்படுத்த எழுதவேண்டிய நிரல் :
<table border="1">
<tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr>
<tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr>
</tbody></table>
ஆனால் இந்த நிரலை அப்படியே போட்டு, இன்னும் வரிகளை (ROWS) அதிகரித்துக்கொண்டே போனால் அப்புறம் பல்லிளிப்பு தான்
ஒரு சுலபமான வழி, இந்த நிரலை இட்டு நடுவில் உள்ள வெற்றிடங்களை நாமே களைந்து விடுவது
<table border="1"><tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr><tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr></tbody></table>
ஆனால் நிரலின் அளவு பெரியதாக இருந்தால் இந்த முறை பெண்டை நிமித்திவிடும். அதுக்கு இன்னொரு எளிய வழி CSS உடன் நிரலை பயன்படுத்துவது
<style type="text/css">.nobr br { display: none }</style>
<div class="nobr">
<table border="1">
<tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr>
<tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr>
</tbody></table>
<div>
இனி நீங்களும் பதிவுல கட்டம் கட்டி கலாசலாம் :)
பதித்தது : ச.பிரேம்குமார் 4 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள், பதிவர் வட்டம்
18 January 2008
வாடகைக்கு வீடு தேவை - மொக்கைத் தொடர்
மாப்பி கோபி இந்த மொக்கை விளையாட்டுக்கு கூப்பிட்டு இருந்தார். ஆனா நமக்கு தான் மொக்கை வராதே, என்னத்த எழுதுறதுன்னு ஒரே சோகமா இருந்தேன். அப்புறம் தான் டேய், நீ சீரியஸா எழுத நினைக்கிறதேயே மக்கள் மொக்கயாத்தாண்டா பாக்குறாங்கன்னு மனசாட்சி சொல்லுச்சு. சரி, வழக்கம் போல ஒரு (மொக்க) பதிவப் போட்டுட்டு கோபிக்கு சமர்ப்பணம் செஞ்சிடலாம்னு முடிவு பண்ணி களத்தில் குதிச்சாச்சு
*********************************************************************
வீட்டுக்கும் அலுவலகத்தும் தூரம் ரொம்ப இருக்குறதால வீடு மாத்தலாம்னு தேட ஆரம்பிச்சா, மக்கள் சரிமாரியா மொக்க போடுறாங்க. வாலிபர்களுக்கு சென்னையில் வீடு தர மாட்டார்கள் என்ற காலம் போய், இப்போதெல்லாம் வேலை செய்யும் இளைஞர்கள்/மகளிர் போன்றவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வாடகை எல்லாம் சும்மா கும்முன்னு ஏறிப்போச்சு. வேளச்சேரி பக்கம் எல்லாம் 'வீடு வாடகைக்கு விடப்படும்' எனும் பலகையே வைப்பதில்லை. தரகரிடம் சென்று நமது பட்ஜெட்டை சொன்னால், 'சார், 10 ஆயிரத்துக்கு குறைஞ்சு எல்லாம் வீடே பாக்க முடியாது'ன்னு சொல்லி கேவலமா பாக்குறாரு. அவருக்கு வர வேண்டிய கமிஷனில் குறியாய் இருக்கிறார் அவர்.
ஐ.டிக்காரர்கள் வந்து தான் விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுன்னு சொல்கிறவர்களில் எவறேனும் அவர்கள் வீட்டை குறைந்த வாடகைக்கு விடுவார்களா? ;-)
*********************************************************************
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தங்கர் பச்சானின் பேட்டி பார்க்க நேர்ந்தது. உணர்ச்சி பொங்க தலைவர் சொல்வது என்னவெனில் 'சிரிக்க வைப்பது கூட சுலபம் தாங்க. ஒரு படத்த பார்த்து மக்கள அழ வைக்கிறது தான் கடினம்'. நகைச்சுவை படம் எடுப்பவர்களோ 'சிரிக்க வைப்பது தான் இருக்குறதிலேயே கஷ்டமான விசயம்' அப்படீங்குறாங்க....
என்னமோ போங்க, ஒன்னுமே புரியலை
அது சரி தங்கர், அழகி படத்துல (a-b)^2 = (a+b)(a-b) அப்படின்னு கணக்கு பக்குவமா சொன்னது நீங்க தானே. இந்த குளறுபடிகள வச்சிக்கிட்டு தமிழ் சினிமாவுல நான் மட்டும் தான் சரியான படம் எடுக்குறேன்னு எப்படி சொல்ல முடியுது உங்களால?!
*********************************************************************
துபாய் பதிவர்கள் எல்லாம் கிழிகிழின்னு கிழிச்ச இளையராசாவின் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. சாதனா சர்க்கத்தின் தமிழ் உச்சரிப்பை ராஜா குறை சொன்னார்னு யாரோ எழுதியிருந்தாங்க. அது சரி, ஆனா நிகழ்ச்சியில பாடுனவுங்க பட்டியல பாத்தா யாருமே தமிழ் பேசுறவுங்க இல்லையே. சித்ரா, பாலசுப்ரமணியம், மனோ, மஞ்சரி, ஸ்ரேயா, சாதனா, விஜய் யேசுதாஸ், அப்படின்னு பாடின எல்லோருமே பிறமொழி கலைஞர்கள் தானே.... ஏன், தமிழ்நாட்டுல பாட தெரிஞ்சவுங்க யாருமே இல்லையா என்ன?
பாடின ஒரே தமிழ்க்குரல் இளையராளுக்கு தமிழ் தெரியுது, இளையராசா பொண்ணுங்குற தகுதி இருக்கு....ஆனா மேடையில் கணீர்னு பாட வரல. கொஞ்சம் தடுமாறவே செய்யுறாங்க
*********************************************************************
மக்கள் தொலைக்காட்சியில் சாதாரணமாகவே நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லாவே வந்துக்கிட்டு இருக்கு. அதிலும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பு. கஷ்டப்பட்டு தமிழ் பேசாம, இலக்கிய நடையில் பேசாமல், சரளமா உரையாடும் தொகுப்பாளர்களை பாக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இவர்கள் பேசப்பேச கூட உரையாடும் பொதுமக்களும் தமிழிலேயே உரையாட முயல்வது வரவேற்கத்தக்க ஒன்று. வாழ்க மக்கள் தொலைக்காட்சி! வளர்க அவர்கள் பணி!
ரொம்ப சிந்திக்காம மத்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை நகலெடுக்கும் தொலைக்காட்சியின் கண்களுக்கு 'மக்கள் தொலைக்காட்சி' மட்டும் கண்ணுக்கே தெரிவதில்லையா என்ன?
*********************************************************************
இன்னும் இது போல மொக்கைகள் நிறைய போட நினைத்தாலும், சில மொக்கை ஆணிகள் இருப்பதால், ஐ ம் தி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
ஓ மறந்தே போயிட்டேன், மொக்கை போட மூன்று பேரை அழைக்கனுமாமே..... நான் அழைக்க நினைப்பவர்கள்
1. 'காதல் முரசு' அருட்பெருங்கோ
2. 'அண்ணாச்சி' ஆசிப் மீரான்
3. 'ஜொள்ளுலக பேரரசு' ஜொள்ளுப்பாண்டி
பதித்தது : ச.பிரேம்குமார் 7 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்
10 January 2008
பூக்களில் உறங்கும் மௌனங்கள்
கருவறையிலும் கல்லறையிலும் ஒருவாறே மணம்வீசும்.. புயலோ வெயிலோ உய்யும் வரை மலர்ச்சி காட்டும்.. அடுத்தொரு தலைமுறைக்கான தலையெழுத்தைத் தாங்கிநிற்கும்போதும் தலைக்கணத்திலில்லாது தென்றலின் திசையில் மட்டுமே தலைசாய்க்கும்.. பூக்களில் எல்லாம் உறங்குது படிப்பினைகள் மனிதன் மொழிபெயர்க்க முடியா மௌனங்களாய்! |
சிறில் அலெக்ஸின் 'பூக்களில் உறங்கும் மௌனங்கள்' போட்டிக்காக
பதித்தது : ச.பிரேம்குமார் 10 கருத்துக்கள்
எழுத்து வகை: கவிதை
7 January 2008
சென்னை புத்தகக் கண்காட்சி '08 - நிறைகளும் குறைகளும்
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சனிக்கிழமை (5 ஜனவரி, 2008) செல்ல நேர்ந்தது. விடுமுறை நாட்களில் 11 மணிக்கே கண்காட்சி தொடங்கிவிடும் எனும்போது 12 மணிக்கு சென்றபோதுக்கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை
1 மணி வாக்கில் நண்பர்கள் அருட்பெருங்கோ,அ.பிரபாகரன் மற்றும் நித்தியானந்தம் ஆகியோர் சேர்ந்துக்கொள்ள கண்காட்சியில் சுற்ற ஆரம்பித்தோம்
* இந்த முறை கவிதை புத்தகங்கள் அதிகமாக தென்படவில்லை. சுற்றிச்சுற்றி வைரமுத்து, தபூ சங்கர் கவிதைகள் தான் கண்ணில் பட்டன. இளம் பெண்கள் அதிகமாக தபூ சங்கரின் காதல் கவிதைகளை வாங்கிச் சென்றனர். தபூ சங்கரின் சமீபத்தியப் புத்தகம் 'நெஞ்சவர்ணக் கிளி'. நினைவுகளை மட்டுமே மையமாகக் கொண்ட நல்லதொரு கவிதைத் தொகுப்பு
* நிலாரசிகனின் 'மயிலிறகாய் ஒரு காதல்' புத்தகம் கண்காட்சியில் விற்பனைக்கு கிடைத்தது. அதுவும் நல்லதொரு காதல் தொகுப்பு. புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதென்றும் கேள்வி. நிலாவுக்கு வாழ்த்துக்கள்
வலைப்பதிவுலக காதல் கவிஞர்கள் எல்லாம் அடுத்த கண்காட்சிக்குள்ளாவது புத்தகம் போட முடிவெடுக்கலாம்.
* இளைஞர்கள் பலர் புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை தேடிப் பிடித்து வாங்குவது மகிழ்ச்சி தரும்படியாக இருந்தது
மதியத்திற்கு மேல் நண்பர்கள் ப்ரியன், கென், அனிதா, எழில், த.அகிலன் ஆகியோர் சேர்ந்துக் கொள்ள கண்காட்சிக்கு சென்றது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததாய் ஆயிற்று. மாலை நெருங்ககையில் மக்கள் கூட்டம் அலைகடலென கண்காட்சியில் திரண்டிருந்தது பார்க்கவே பரவசத்தை தந்தது.
சில குறைகள்
சனிக்கிழமை கண்காட்சி தொடங்கி இரண்டாவது நாள் என்ற போதும், நிறைய புத்தகங்கள் வந்திருக்கவில்லை. சில அரங்குகளை அப்போது தான் சரி செய்துக் கொண்டிருந்தார்கள்.
உணவு ஏற்பாடு மிக மிக மோசம். எரிச்சல் மூட்டும் விதமாகவே இருந்தது. சென்ற முறை வெகு சிறப்பாக செய்திருந்தார்கள். இந்த முறை இந்த குறைபாடுகள் ஏன்?
பதித்தது : ச.பிரேம்குமார் 5 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள்